பக்கம் எண் :

பக்கம் எண் :557

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

 



105





110





115





120





125





130





135


யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல்
பேதைமை சார்வாச் செய்கை யாகுஞ்
செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுருச் சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா வூறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்

வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே யேனை வழிமுறைத் தோற்றந்
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா

டவல மரற்றுக் கவலைகை யாறெனத்
தவலில் துன்பந் தலைவரு மென்ப
ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி
பேதைமை மீளச் செய்கை மீளுஞ்
செய்கை மீள வுணர்ச்சி மீளும்

உணர்ச்சி மீள வருவுரு மீளும்
அருவுரு மீள வாயின் மீளும்
வாயின் மீள வூறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்

வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளுங் கருமத் தொகுதி மீளத்
தோற்ற மீளுந் தோற்ற மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச்

சாக்கா டவல மரற்றுக் கவலை
கையா றென்றிக் கடையில் துன்பம்
எல்லா மீளுமிவ் வகையான் மீட்சி
ஆதிக் கண்ட மாகு மென்ப
பேதைமை செய்கை யென் றிவை யிரண்டுங்

காரண வகைய வாத லானே