140
145
150
155
160
165
170
|
இரண்டாங் கண்ட மாகு மென்ப
உணர்ச்சி யருவுரு வாயி லூறே
நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன
முன்னவற் றியல்பாற் றுன்னிய வாதலின்
மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக்
கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை
மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட்
குற்றமும் வினையு மாக லானே
நான்காங் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம்
எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற்
பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி
நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை
ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே
தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும்
உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும்
உணர்வு முருவு முடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங்
கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள்
குலவிய குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை
|