205
210
215
220
225
230
235
|
இயைந்துரை யென்ப தெழுத்துப்பல கூடச்
சொல்லெனத் தோற்றும் பலநாட் கூடிய
எல்லையைத் திங்க ளென்று வழங்குதல்
உள்வழக் குணர்வில் வழக்கு முயற்கோடு
உள்ளது சார்ந்த வுள்வழக் காகுஞ்
சித்தத் துடனே யொத்த நுகர்ச்சி
உள்ளது சார்ந்த வில்வழக் காகுஞ்
சித்தமுற் பவித்தது மின்போ லென்கை
இல்லது சார்ந்த வுண்மைவழக் காகுங்
காரண மின்றிக் காரிய நேர்தல்
இல்லது சார்ந்த வில்வழக் காகும்
முயற்கோ டின்மையிற் றோற்றமு மில்லெனல்
நான்கு நயமெனத் தோன்றப் படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை யியல்பென்க
காரண காரிய மாகிய பொருள்களை.
ஒன்றா வுணர்த லொற்றுமை நயமாம்
வீற்றுவீற் றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயமென வேண்டால் வேண்டும்
பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு
ஒன்றிய காரண முதவுகர ரியத்தைத்
தருதற் குள்ளந் தானிலை யென்றல்
புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும்
நெல்வித் தகத்து ணென்முளை தோற்றுமெனல்
நல்ல வியல்புநய மிவற்றினாங் கொள்பயன்
தொக்க பொருளல தொன்றில்லை யென்றும்
அப்பொரு ளிடைப்பற் றாகா தொன்றுஞ்
செய்வா னொடுகொட் பாடிலை யென்றும்
எய்துகா ரணத்தால் காரிய மென்றும்
அதுவு மன்றத லாதது மன்றென்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினாவிடை நான்குள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமையெனத்
தோன்றியது கெடுமோ கெடாதோ வென்றாற்
|