கேடுண் டென்றல் துணிந்துசொல லாகுஞ்
செத்தான் பிறப்பா னோபிற வானோ
என்று செப்பிற்
பற்றிறந் தானோ வன்மக னோவெனல்
மிகக்கூ றிட்டு மொழிதலென விளம்புவர்
வினாவின் விடுத்தன் முட்டை முந்திற்றோ
பனைமுந் திற்றோ வெனக்கட் டுரைசெய்
என்றா லெம்முட்டைக் கெப்பனை யென்றல்
வாய்வா ளாமை யாகா யப்பூப்
பழைதோ புதிதோ வென்று புகல்வான்
உரைக்கு மாற்ற முரையா திருத்தல்
கட்டும் வீடு மதன்கா ரணத்தது
ஒட்டித் தருதற் குரியோ ரில்லை
யாமே லூரைத்த பொருள்கட் கெல்லாங்
காமம் வெகுளி மயக்கங் காரணம்
அநித்தந் துக்க மநான்மா வசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி யுய்த்து மயக்கங் கடிக
இந்நால் வகையான் மனத்திரு ணீங்கென்று
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீப நன்கனங் காட்டத்
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றனளென்.
உரை
போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் - தனது முன்னைப் பிறப்பு வரலாற்றை யறிந்தவளான மணிமேகலை;
தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு; சீலம் தலைநின்று - சீலங்களின்
வழி நின்று; புத்த தன்ம சங்கமென்னும் முத்திறமணியை-புத்தன் தருமம் சங்கமென்னும்
கொள்கைகளான முக்கூற்று மணிகளையும்; மும்மையின் வணங்கி - மனம் மொழி மெய்
என்ற மூன்றாலும் வணங்கி; சரணாகதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புக
|