பக்கம் எண் :563 |
|
Manimegalai-Book Content
30.
பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
|
6--15.
|
சரண்புகுதலின், "சரணாகதியாய்ச் சரண் சென்றடைந்தபின்" என்றார். புத்த சங்கத்துச்
சத்துவராதற்கு இது முதற்படி யெனப்படும்.
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்-முன்பின் மாறு பாடில்லாத அறங்களின்
வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்; உயிர்-உயிர்கள்;
அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி நிரம்பியிருந்த காலத்தில்;
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப-முடியணிந்து விளங்குந்தேவர்கள் தன்னை முறைப்படி
வணங்கி நிலவுலகிற் றோன்றி அறங்கூற வேண்டுமெனக் குறையிரந்து நின்றதனால்;
துடிதலோகம் ஒழியத் தோன்றி - துடித லோகத்தை விட்டு மண்ணுலகிற் றோன்றி;
போதி மூலம் பொருந்தி யிருந்து-புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில்
எழுந்தருளியிருந்து; மாரனை வென்று வீரனாகி - மாரனென்னும் தேவனை வென்றதனால்
வீரனாக விளங்கி; குற்ற மூன்றும் முற்றவறுக்கும்-மூவகைக் குற்றங்களையும் அறவே
கெடுத்து இலவாக்கும்; வாமன் வாய்மை எமக் கட்டுரை - புத்த தேவனது மெய்ம்மை
நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்புமாக எடுத்தோதியதும்; இறந்த காலத்து எண்ணில்
புத்தர்களும் - அவர்க்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்த சங்கத்தோர் பலராலும்;
சிறந் தருள்கூர்ந்து-உயிர்க்ள்பால் மிக்க அருள்கொண்டு; திருவாய் மொழிந்தது
- மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டது. மாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது எ -
று.
துடிதலோகத்து அமரர் இரப்ப, தோன்றி, இருந்து, வீரனாகி, அறுக்கும் வாமன் கட்டுரையும்
புத்தர்களும் மொழிந்ததுமாகிய அறம் என இயைத்து, ஈண்டு யான் கூறலுறுவதென்பதை
இசை யெச்சத்தாற் பெய்துரைத்து முடிக்க. புத்தன், தருமம், சங்கம், என்ற மூன்றனுள்,
புத்தனையும் சங்கத்தையும் இதனாற் கூறி, தருமத்தை யுரைத்தற்கு முகஞ் செய்கின்றார்;
இவ்வாறே சாந்தி தேவரும் தாமெழுதிய போதி சரியாவதார பஞ்சிகை (ii 8) யிலும்
கூறுதல் காண்க. இவ்வாறு புத்தனையும் சங்கத்தையும் கூறியபின் தருமங் கூறுபவாயினும்
வழிபடுமிடத்து புத்தன், தருமம், சங்கம் என்ற மூன்றையும் இம் முறையே வழிபடுவரென
வறிக.
புத்தனது உடமபைத் தன்ம காயமென்றும், அவனை அறத்தின் வடிவமென்றும் திவ்வியாவதானம்
முதலிய நூல்கள் கூறுதலால், இவரும் திருவறமூர்த்தி" யென்றார். அறிவு, தானந்தாங்கிச்
சீலம் தலை நிற்றற்கேதுவாகிய நல்லறிவு. மக்களென்னாது "உயிர்" என்றார்.
நல்லறிவு வயிதாயினமையின்: "அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்" (குறள்: 848)
என்றாற்போல. புத்தன் பிறத்தல் வேண்டித் துடித லோகத்தே தேவர்குறையிரந்து
நின்றசெய்தியை, "தேவரெல்லாம்,. தொக்கொருங்கீண்டித் துடிதலோகத்து, மிக்கோன்
பாதம் விழுந்தன ரிரப்ப"
|
| |
|
|