விளக்க,
"மண்டில வகையா யறியக் காட்டி" யென்றார். இதனை "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும"
(24-5) என்று மேலும் கூறுப.
20--5.
எதிர்மறை ஒப்ப-இவ்வாறு
எதிர்தோன்றுதற் கேதுவாகிய காரணத்தை நீக்கிய வழி; மீட்சியுமாகி-பேதைமை
முதலியவற்றினின்று மீட்சி யுண்டாம்; ஈங்கு இது இல்லா - இவ்வாறு காரணமில்லை
யாகவே; வழி இல்லாகி - காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லையாதலாலும்;
ஈங்கு இது உள்ள - இவ்வாறே காரணத்தை விரும்பிய வழி; வழியுண்டாதலின்-காரியமாகிய
தோற்ற முண்டாதலாலும்; தக்க தக்க சார்பில் தோற்றம் என - காரணங்களை யுள்ளுதலும்
தள்ளுதலுமாகிய தகுதிக் கேற்பச் சார்பில் தோன்றும் காரியத் தோற்றம் உண்டாதலும்
இல்லையாதலுமென்று; சொற்றகப்பட்டும் - சொல்லப்பட்டும்; இலக்கணத் தொடர்பால்
கருதப்பட்டும் - காரண காரியங்களின் உண்மையின்மைகள் இவ்வியைபால் உணரப்பட்டும்
வரும் எ - று.
பேதைமூயினின்று செய்கையும் செய்கையினின்றுணர்வும் இவ்வாறு
பிறவும் தோன்றும் வழிமுறைத் தோற்றத்துக்கு மாறாக, பேதைமை முதலியவற்றை நீக்கியவழித்
தோற்றமின்றாதலின் "எதிர் முறையோப்ப" என்றார். ஒப்புதல்-நீக்குதல், இதனையே
சிறிது விளக்கலுற்று பேதைமை யில்வழிச் செய்கையின்மையும், செய்கை யில்வழி
உணர்வின்மையும், இவ்வாறு பிறவற்றின் இன்மையும் பெறப்படுவது பற்றி "ஈங்கிது
வில்லா வழியில் லாகி" யென்றும், பேதைமை முதலிய வற்றைக் கொண்ட வழி. செய்கை
முதலியன வுளவாதலும் பெறப்படுதலின், "ஈங்கிதுவுள்ள வழியுண்டாதலின்" என்றும்
கூறினார். மீட்சிவகையை மேலே "பேதைமை மீளச் செய்கை மீளும்" என்பது முதலியவற்றாலும்,
வழிமுறைத் தோற்றமுண்டாதலை, "பேதைமை சார் வாச் செய்கை யாகும்" என்பது முதலியவற்றுறாலும்
கூறுப. காண்டல் கருதல் என அளவை யிரண்டாதலின். அவற்றிற் கேற்கபக் காட்சியாற் காணப்படுவதை. "சார்பிற்றோற்றமெனச் சொற்றகப்பட்டும்" என்றும், கருதலாற்
கொள்ளப்படுவதை, "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" என்றும் கூறினார்.
25--6. கண்டம்
நான்கு உடைத்தாய்-நான்கு வகையான கண்டங்களை யுடையதாய்; மருவிய சந்தி வகை
மூன்று உடைத்தாய்-அக் கண்டங்கள் தம்மிற்புணருங் புணர்ச்சியை மூன்று வகையாக
வுடையதாய் இந்நிதானம் இயலும் எ - று.
பேதைமை முதலிய பன்னிரண்டனையும் நான்காகப் பகுத்து ஒவ்வொன்றையும்
கண்டமெனக் கூறுப; அவற்றுள் பேதைமையும், செய்கையும் முதற் கண்டமெனவும், உணர்வு,
அருவுரு, வாயில், ஊறு. நுகர்வு என்ற ஐந்தும் இரண்டாங்கண்டமெனவும். வேட்கை,
பற்று,பவம்
என்ற மூன்றும் மூன்றாங் கண்டமெனவும்,
|