பக்கம் எண் :

பக்கம் எண் :566

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
 
தோற்றமும், வினைப்பயனும் நான்காங் கண்டமெனவும் கூறுப. இவற்றின் இயல்பை, "ஆதிக் கண்டமாகுமென்ப" என்பது முதலியவற்றால் விரியக் கூறுப. முதற் கண்டத்தின் ஈறாகிய செய்கைநும் இரண்டாங் கண்டத்தின் முதனின்ற உணர்வும் கூடும் கூட்டத்தை முதற் சந்தியென்றும், இரண்டாங்கண்டத் தீற்று நுகர்வும் மூன்றாங் கண்டத்து முதனின்ற வேட்கையும் கூடும் கூட்டம் இரண்டாஞ் சந்நியென்றும், மூன்றங் கண்டத்தீற்றுப் பவமும் நான்காங் கண்டத்து முதனின்ற தோற்றமும் கூடும் கூட்டம் மூன்றாஞ் சந்தியெனவும் கூறப்படும்; இவற்றின் இயல்பை. "பிறப்பின் முதலுணர்வாதிச் சந்தி" என்பது முதலியவற்றால் விளங்கக் கூறுப. இந்நிதானம் இயலும் என்பது வருவிக்கப்படட்து.

27--8. பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்; தோற்றற்கேற்ற காலம் மூன்றுடைத்தாய் - அம்மூவகைப் பிறப்பும் தோன்றுதற்கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும் எ - று

பிறப்பு மூன்றாவன; அவரும், உருவம், காமம் என்பன. காலம் மூன்று; இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்பன, இவற்றை, "மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை" (30,158) என்பது முதலியவற்றாலும் "கால மூன்றுங் கருதுங் காலை" (30-159) என்பது முதலியவற்றாலும் விளக்கிக் கூறுப.

29--31.பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும்; வினையும்-பவமும் செய்கையுமாகிய வினைகளும்; பயனும்- இவை யொழிந்த ஏழுமாகிய பயனுமாக; விளைந்து-இப்பன்னிரண்டும் நிலவுதலால்; நிலையில நிலையில்லாதனவென்றும்; வறிய - பயனில்லாதனவென்றும்; துன்பம் என - துன்பமென்றும்; நோக்க- இவற்றைக் கண்டு கழிக்கவே; உலையா வீட்டிற்குறுதியாகி-கெடாத வீடுபேற்றிற்கு உறுதியாகிய நன்ஞானமுண்டாம் எ-று.

பேதைமை முதலிய பன்னிரண்டனுள், வேட்கையும், பற்றும், பேதைமையும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினையென்றும், உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, பிறப்பு, வினைப்பயனாகிய ஏழும் பயனென்றும் வகுத்தோதி, இவற்றை "நிலையில் வறிய" என நோக்கி யொழிதலால் வீடுபேற்றிற் குறுதியுண்டா மென்பார், "உலையா வீட்டிற் குறுதியாகி" யொன்றர். பிறாண்டும், "துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா, எப்பொருளுக்கு மான்மா விலையென இப்படி யுணரும் இவை வீட்டியல்பாம்" என்று கூறுதல் காண்க.

32-34. நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி-நான்கு வகையகிய வாய்மைகட்கும் சார்பிடனாகியும்; ஐந்து வகைக் கந்தத்து அமைதியாகி - ஐவகைக் கந்தங்களுக்கும் அமைவுடையதாயும்; மெய்வகை