பக்கம் எண் :

பக்கம் எண் :567

Manimegalai-Book Content

 

30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
 

ஆறு வழக்கு முகம் எய்தி - மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம் நிலவும் எ-று.

வாய்மை நான்காவன: துக்கம், துக்க நீக்கம் துக்கத் தோற்றம், துக்க நீக்க நெறியென்பன. ஐவகைக் கந்தமாவன; உருவம், வேதனை, குறிப்பு, பாவனை விஞ்ஞான மென்பன. வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த வுண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த வுண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப.

35--6. நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங்களாலும் நால்வகைப் பான்களை உற்று; இயன்ற-இவற்றோடு ஒப்பிவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய்-நான்கு வகையான வினாவடையுமுடாயதாய் இந்நிதானம் இயலும் எ-று.

நயங்கள் நான்காவன: ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்பன. பயன் நான்கினையும் "தொக்க பொருளல தொன்றில்லை யென்றும், அப்பொருளிடைப் பற்றாகாதென்றும், செய்வானோடு கோட்பாடில்லை யென்றும். எய்து காரணத்தாங் காரியம் என்று மதுவு மன்று அலாதது மன்றென்றும், விதிமுறை தொகையினால் விரிந்த" (30-229-34) என்று கூறுதலாலறிக. வினாவிடை நான்காவன; "வினாவிடை நான்குள, துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விருத்தல், வாய்வாளாமையென" (30. 285--37) என வருதல் காண்க.

37--44.நின்மிதி இன்றி - நிருமிக்க்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடுவதில்லையாய்; பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்; யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதொன்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும் இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி - பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனை யனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும் பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந்நிதானங்கள் எ-று.

நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மதியின்றி" யென்பது முதலாக விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும