பிறப்பும்
வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய" என்றார் ஒன்றின்வழி யொன்று தொடர்ந்
தொடுங்குதலும் மீளத் தோன்றுதலு முண்டேயன்றி யறக் கெடுவதில்லை யென்றற்கு,
"ஊழ்பாடின்றி" என்றதனோ டொழியாது "பின் போக்கல்லது பொன்றக் கெடதாய்"
என்றார். இவை எப்போதும் செய்வோனை யவாவி நிற்குமென்பது தோன்ற, "பண்ணுநரின்றிப்
பண்ணப்படாதாய்" என்றும், செய்வோர் செய்திப் பயன் கண்டு "யான் செய்தேன்"
என்றும், "இஃது எனது" என்றும், எண்ணுதற் கேதுவாவதல்லது, அவை தாமே யல்ல என்றற்கு,
"யானுமின்றி என்னதுமின்றி" யென்றும், இவ்வாறே பிறவும் கூறினார். இங்ஙனம்
எதிர்மறை முகத்தாற் கூறியவர், உடன்பாட்டு வாய்பாட்டால் வற்புறுத்தற்கு இவை
"வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய" என்றார்,
இவ்வளவும் நிதானத்தின் பொதுவியல்பே கூறிற்றென வறிக. திருவாய் மொழிந்தது;
நெறியுடைத்தாய். கண்ட நான்குடைத்தாய், மூன்றுடைத்தாய், மூன்றுடைத்தாய், உறுதியாகி,
இடனாகி, அமைதியாகி, முகமெய்தி, பயன்களெய்தி, உடைத்தாய் கெடாதாய் பண்ணப்படாதாய்,
இன்றி , இன்றி இன்றி, தானேயாகிய ''பேதைமை, முதலியனவெனக் கூட்டி முடிவு செய்க.
இக்கூறிய கருத்தையே மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச் சுனர்1
எட்டு வகையாக்க் கூறுகின்றார்.
45--50.
பேதைமை...ஈராறும்
- பேதையையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும்
பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின்
இயல்பு பன்னிரண்டினையும்; பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள்
ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய
வீடுபேற்றினை எய்துவர்; அறியாராயின் - அறியர் தொழிவாராயின்; ஆழ்நகரகறிகுவர்
- கரையேறமுடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தான் அறிவர்
எ-று. பேதைமை முதலாகக் கூறிய இப்பன்னிரண்டினையும் ஏனைப் புத்த
நூல்கள் முறையே, அவிச்சை சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதானம்,
பரிசம், வேதனை திருஷ்ணை, உபாதானம், பவம் சாதி என்று கூறிகின்றன. இவ்வாசிரியர்
வாயில் என்றதனை ஏனையோர் சடாயதனம் என்றற்குச் காரணம், பொறியைந்தனோடு
மனத்தையும் கூட்டிக் கோடலேயாகும். இவர் சடாயதன மென்பதை விலக்கிப் பஞ்சேந்திரியங்களையே
கோடலின், இவ்வாறு கூறும் தசபூமிக சூத்திர முடையாரோடு இவர் ஒத்த கருத்துடையரென்று
காணலாம்; ஆயினும்
1
No destruction. no
production; no discontinuity, no per manence; no unity; no diversity:
coming (appearance), no going (disappearance)"
-- (11--13.)
|