பக்கம் எண் :

பக்கம் எண் :586

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

1 இவற்றின் விரவைச் சிவஞானசித்தி முதலிய தமிழ் நூல்களிலும் சருவதரிசன சங்கிரக முதலிய வட நூல்களிலும் கண்டு கொள்க.

191-8.   மறுவின்று கிளப்பின் - குறைவின்றிக் கூறுமிடத்து; அறுவகை வழக்கு - ஆறுவகைப்பட்ட வழக்காவன; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும்- தொகையும் தொடர்ச்சியும் தன்மைமிகுத்துரையும் இயைந்துரையும் என்ற நான்கோடும்; இயைந்த - சேர்ந்து வருவனவாகிய; உண்மை வழக்கு...இல்லது சார்ந்த வுண்மை வழக்கும் என - உண்மை வழக்கெனவும், இன்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வுண்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வுண்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வின்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வின்மை வழக்கெனவுமாம் எ - று

எனவென்பது எங்குஞ் சென்றியைந்தது. ஆம் என்பது வருவிக்கப்பட்டது. தொகை முதலியன இயைந்த வழக்காவது தொகையுண்மை வழக்கு தொகையின்மை வழக்கு என்றாற் போல வருவது. இவ்வாறே பிறவும் ஒட்டிக் கொள்க. இவ்வகையால் வழக்கு இருபத்து நான்காமாயினும், ஈண்டு ஆசிரியர் சுருக்கம் வேண்டித் தொகை முதலிய நான்கையும் தனிப்படக் கூறி, அவற்றின் பின் அறுவகை வழக்கினையும் பொதுப்படக் கூறுகின்றார். சுருங்கக் கூறுமிடத்தும் இன்றியமையாது வேண்டப்படுவனவற்றை யெஞ்சாமற் கூற வேண்டுவது பற்றி, "மறுவறக் கிளப்பின்" என்றார்.

199-201.   சொல்லிய தொகைத்திறம்-மேலே தொகை முதலாகச் சொல்லப்பட்டவற்றுள் தொகை யென்னும் கூறாவது; உடம்பு நீர் நாடு - உடம்பும் நீரும் நாடுமாகும்; தொடர்ச்சி - தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் - நெல்வித்தின் முளையும் முளையில் தாளும் அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சியால்; அவற்றை நெல்லென வழங்குதல் - அக்காரண காரியங்களை நெல்லென்று வழங்குவதாம் எ - று.

பல்வகைத் தாதுக்களின் கூட்டத்தை உடம்பென்றும், பல சிறு துளிகளின் கூட்டத்தை நீரென்றும், பல சிறியவும் பெரியவு மாகிய ஊர்களின் கூட்டத்தை நாடென்றும் வழங்குவது தொகைத்திறம் என்பார், "தொகைத்திறம் உடம்பு நீர் நா"டென்றார். நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குமாறு போலக் காரண காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி யென்பார், "வித்து முளைதாளென்றிந் நிகழ்ச்சியில்


1 தரும சங்கிரகம் Sec. 96.