பக்கம் எண் :

பக்கம் எண் :587

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

அவற்றை நெல்வென வழங்குதல்" என்றார். இனி, இந்நூற்களை யாராய்ந்து கண்ட அருணந்தி சிவனார், தொகையுந் தொடர்ச்சியும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைந்து தொகை யுண்மை வழக்கென்றும், தொகையின்மை வழக்கென்றும், தொடர்ச்சி யுண்மை வழக்கென்றும் தொடர்ச்சியின்மை வழக்கென்றும் வருமென்று கூறித் தொகையுண்மை வழக்காவது, "ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி யைந்துங்கூடி, வருபவனென்று ரைத்தல் தொகை யுண்மை வழக்க தாகும்" என்றும், தொகையின்மை வழக்காவது, "உருவமங் காதி யாய வைந்தையு மொருவனின்று, தருவது தொகையின் இன்மை வழக்கதாம் சாற்றுங் காலே" என்றும், தொடர்ச்சி யுண்மை வழக்காவது, "காரண காரியத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின், சோர்வறத் தோன்றுங் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை" யென்றும் தொடர்ச்சியின்மை வழக்காவது "ஒருவனே எக்காலத்து முள்ளா னென்று தேர்வது தொடர்ச்சி யின்மை வழக்கதாம்" (சிவ. சித்தி. பரபக். 70-71) என்று கூறுகின்றார்.

202-4.   இயல்பு மிகுத்துரை - தன்மை மிகுத்துரையாவது; ஈறுடைத்தென்றும் - ஒரு பொருள் அழிந்ததென்றும்; தோன்றிற்றென்றும் - பிறந்ததென்றும்; மூத்ததென்றும் - முதுமை யுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள்; மூன்றின்-மூன்றனுள்; ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் - ஒரு கூற்றின் தன்மையை மிக் கெடுத்துக் கூறுவதாம் எ - று.

ஈறுடைமையாகிய தன்மையை "ஈறுடைத்தென்றும்" பிறப்புடைமையைத் "தோன்றிற்றென்றும்" முதுமையுறுந் தன்மையை "மூத்ததென்றுங்" கூறினார். பிறப்பு மூப்பு இறப்பு என்னாது பிறழக் கூறினார். செய்யுளாதலின். தோற்றத்தினும் அழிவு நன்கு விளங்குதலும் முதுமை அவ்வழிவுபோல நன்கு விளங்காமையுங் கண்டு இவ்வாறு கூறினாரெனினுமாம். இதனையும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைக்கும் அருணந்தி சிவனார், இரண்டினையும், "தோற்றிய பொருள்க ளெல்லாம் நாசமா மென்று சொல்லும். மாற்றமூன்றுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை, போற்றிய பொருள் கண் கட்குப் போனது போன்முதிர்ந்து, வேற்றுமைப்பட்ட தென்கை மிகுத்துரை யில்வழக்கே" (சிவ சித். பரபக். 72) என்று கூறுவர். இதற்கு உரைகண்ட திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் "கண்கட்குப் போனது போன் முதிர்ந்து வேற்றுமைப் படுகை காரியமழிந்து காரணங் கிடக்கை" யென்றும், "மிகுத்துரை மூன்றும் உள்வழக்கு இல்வழக்கு இரண்டினும் வழங்கும் வழியெனக் கொள்க" என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது. இவ்வாசிரியர் மேலே கூறுகின்ற இயைந்துரைத் திறத்தை அருணந்தி சிவனார் விளக்கிற்றலர். அவர், இதனை மேற்கொள்ளாமையை, தொகை