கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ
என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்,
குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப்
பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக.
பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச்
சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள்.
1
"ஆண்மை
திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்"
2
"சுருளிடு
தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு
வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பணித்தோள், வளரிள வனமுலைத்
தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன.
126--131. வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின்
முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண்
ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு
உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற தெய்வ
வடிவினையுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும்
ஒப்புமை காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய -
விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த
ஓவிய்க்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக்
கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ;
சுடுமண்-செங்கல்;
3
"சுடும ணோங்கிய
நெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை;
4
"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி,
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்,"
5
"மயனெனக்
கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்;
6
"வித்தக ரியற்றிய" என்பர்
பின்னும்.
132--45. விழுவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - அழவினைக்
கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன்
மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக்
கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு
கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை
முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய
மூன்று சரங்கள், பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ -
அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு
------------------------------------------------------------------------------
1
சில்ப. 6 : 567.
2
சிலப்.27 : 181-6.
3
பெரும்பாண். 405.
4
மதுரை. 516-8.
5
மணி. 21: 132-3
6
மணி. 3 : ;167.
------------------------------------------------------------------------------
|