பக்கம் எண் :

பக்கம் எண் :37

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  னாயினேன் ; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்-அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண்
இமைக்கும் அள விலே என்னை இந்நகரில்விட்டு மறைந்து நீங்கினன் ;
தாரன் மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன் என்றியைக்க. 1"தாரன்......படிமையன்," என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன் பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம்.

42-43, மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான் - மாணிக்கப் பூங் கொம்பனைய மணிமேகலை, தனித்து அவர்கொய்யும் தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் -
தகுதி வாய்ந்தவ ளல்லள் ;

நீங்கினன் ; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வதுண்டாகலினதனித் தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் என விரித்துரைக்க.

44-46 பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய, இலவந்திகையின் எயிற்புறம் போகின் - இலவந்திகையின் மதிற்புறத்தே சென்றால், உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் - சோழ மன்னனது மருங்கிலுள்ளோர்
ஆண்டுறைவர் ;

மரப் பந்தர் - மரங்களாகிய பந்தர் என்றும், சோலை என்றுமாம். இலவந்திகை - இயந்திர வாவி ; 2"நிறைக்குறி னிறைந்து போக்குறிற் போகும், பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை," என்பது காண்க, 3"இலவந்திகை-நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை ; அஃது அரசனும் உரிமையுமாடும் காவற்சோலை," என்பர் அடியார்க்கு நல்லார் உழையோர்-உரிமை மகளிர் ; காவலாளருமாம். உழையோர் ஆங்குளர் என்றது அதன்கட் போகலாகாது என்றபடியாம்.

47-52. விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர் விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் -பெருமை பொருந்திய வாடாத பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று - கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று,

1 சிலப். 15,

 157-8.   2 பெருங். 1. 40 : 311-2.   3 சிலப். 10 : 30-1.