பக்கம் எண் :

பக்கம் எண் :39

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
அருள் - அன்பு காரணமாகத் தோன்றும் அளி. அன்பு -
அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். பூட்கை - மேற்கோள்.

62-66. அதன் உள்ளது-அச்சோலையின் உள்ளிடத்ததாகிய, விளிப்பு அறை போகாது மெய்புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு - ஓசை வெளியே போகாமல் தன்னைச் சார்ந்தாருடம்பை மட்டும் புறத்தே தோற்றுவிக்கும் பளிக்குமண்டபம் ஒன்று உண்டு; அதன் உள்ளது - அம்மண்டபத்தின் உள்ளிடத்ததாகிய, தூநிற மாமணிச் சுடர்ஒளி விரிந்த தாமரைப்பீடிகை தான் உண்டு- தூய நிறமுடைய மாணிக்கத்தின் மிக்க ஒளிபரந்த பதுமபீடம் ஒன்றுண்டு ;

அதன் உள்ளதாகிய மண்டபம் என்றும், அதன் உள்ளதாகிய பீடிகை என்றும் ஒட்டுக. அறை போதல்-வெளியே போதல். தன்னுள் எய்தினவரது ஓசையை வெளிப்படுத்தாது, உருவினை மட்டும் வெளிப் படுத்துவதென்று பளிங்கு மண்டபத்தின் இயல்பு கூறியபடி. பளிக்கறை மண்டபம்-பளிங்கறையாகிய மண்டபம்; பளிங்குப் பாறையாலாகிய மண்டபமுமாம். தாமரைப் பீடிகை-புத்தன் பாதபீடம். "புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றலும், அதனை வழிபடுவோர் அதுபற்றி, ''ஓம் மணிபத்மே ஹும்'' என்ற மந்திரத்தை ஜபித்தலும் பௌத்த சமய மரபு," என்பர்.

66-72. ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடமாட்டா, அவற்றின்கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக் கேட்பாயாக, கடம்பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் - ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்- அப்பீடத்தின்கண் அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேறும்; நீங்காது யாங்கணும் நினைப் பிலராய் இடின் - நினைப்பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும் சொல்லாது அவண் தங்கும் ;

தொல் யாண்டு-பல் யாண்டு ; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் ''தொல் யாண்டு'', என்றார் - தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப்பற்றி. கடம் - கடன் ; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க.

73-79. ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இதற்குரிய காரணம் யாதென வினவுதியாயின், சிந்தை இன்றியும் செய்வினை