பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவுதிருந்தாத மழலையாகிய்
இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய
நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவச்சுற்றுடைப்
பூந்துகில் - அற்றத்தினை மறைக்காமற் சுறறப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை
உடுப்பொடு துயல்வர தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும்,
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி
பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து-
பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல்,
இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல் களை யணிந்த
மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழைக் கால்கோள்
காண்மினோ என்-ஆலின் கிழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின்
விழாக் கால்கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக்
கண்டு நிற்போரும் ;
கோவையாகிய
முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு
கடுகை அப்புதல் மரபு ; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று
; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி
எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப்பாருமுளர்.
மெய் - சொல்லின் வடிவு, குதலை- இளஞ்சொல்; 1"குதலைச்
செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது
காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை
- காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும்
ஐந்து படைகளின் வடிவாகிய அணி ; இது தாலி என்றும் வழங்கும் ; இதனைச் சிறுவர்க்கு
அணிதல் மரபு; 2"தாலி
களைந்தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை
யானையை வைத்து ஊர்தல் 3"பொற்சிறு
தேர்மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும்
கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும்
குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர்
நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர்