பக்கம் எண் :

பக்கம் எண் :47

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  செங்கால் வெட்சியும் - மஞ்சாடியும் மகிழும் சிவந்த காலையுடைய வெட்சியும், நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - நாரத்தையும் சுரபுன்னையும் பரந்து மலர்கின்ற புன்னையும், பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்-பிடவமும் செம்முல்லையும் வளைந்த முள்ளையுடைய தாழையும், குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் - வெட்பாலையும் மூங்கிலும் பருத்த அடியினையுடைய அசோகமும், செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் - செருந்தியும் வேங்கையும் பெரிய சண்பகமும், எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி-நெருப்பைப்போற் சிவந்த பூக்களையுடையஇலவமும் ஆகியவை விரிந்த மலர்களைப் பரப்ப, வித்தாகர் இயற்றிய விளங்கிய கைவினை - கைத்தொழிலில் மேம்பட்ட வித்தகரால் இயற்றப்பட்ட, சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-சித்திரச் தொழிலமைந்த துகிர் போர்த்ததுபோலத்
தோன்றிய, உவவனம் தன்னை - உவவனத்தை, தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு - தொழுது காட்டிய சுதபதியுடன், மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை - மணிமேகலை மலர் கொய்தற்கு அடைந்தனள் என்க,.

பிடவம்-குட்டிப் பிடவம் என்னும் கொடி; 1"புதன்மிசைத் தளவி
னிதன்முட் செந்நனை, நெருங்குகுலைப் பிடவமோ டொருங்கு பிணியவிழ" என்பது அகம். பரப்பி - பரப்ப வென்க. புத்தன் பாதபீடிகையுள்ள தாகலின் வனத்தைத் தொழுது காட்டினள் என்க.
  மாதவி யுரைத்த உரைமுன் றோன்றி மணிமேகலைக்கு ஏது
நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின், அக்காரிகை வெதுப்பக் கலங்கி உருட்டி ஆட்ட, மாதவி நோக்கி மாற்றிக் கொணர்வாய் என்றலும், அதனைக் கேட்டுத் துயரொடு கூறும் சுதமதி, ''கண்ணீரைக் கண்டனனாயின் காமன் நடுங்கும்; ஆடவர் அகறலுமுண்டோ; நின்றிடிற் பேடிய ரன்றோ ; அன்றியும், யான் வருங் காரணம் கேளாய்; கொய்வேனை விஞ்சையன் எடுத்தனன், எழுந்தனன், படுத்தனன் ; ஆயினேன் ; அவன் அகன்று நீங்கினன்; ஆதலால் மணிமேகலை தன்மையளல்லள் ;
போகின், உழையோர் ஆங்குளர்; செல்லார்; எய்தார்; உவவனமென்ப தொன்றுண்டு; உண்டு; உண்டு; மரபினது அதுதான்; செம்மை தானிலள்; யானும் போவல்; என்று கூடிச் செல்வுழி, பின்னரும் நிற்குநரும் காண்கு நரும் நிற்குநரும் நிற்குநரும் மணிமேகலையைச் சுற்றி இனைந்துக, மணிமேகலை சுதமதி தன்னொடு மலர் கொய்யப் புகுந்தனள் என முடிக்க.

மலர்வனம் புக்க காதை முற்றிற்று.


1 அகம். 23.