பக்கம் எண் :

பக்கம் எண் :49

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 





5





10





15





20





25





30
பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர்

மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்
மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப்
பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்

கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்
இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்

விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய
கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த
வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண்
மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து
தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்

அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு
எறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணிச்சிரல் காணெனப்
பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட

மணிமே கலையம் மலர்வனங் காண்புழி
மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதய குமரன் உருகெழு மீதூர்
மீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய
கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து

கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு
இதைசிதைந் தார்ப்பத் திரைபொரு முந்நீர்
இயங்குதிசை யறியா தியாங்கணு மோடி
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்