பக்கம் எண் :

பக்கம் எண் :50

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 

35





40





45





50





55





60





65
காழோர் கையற மோலோ ரின்றிப்

பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக்
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்கு
இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்
ஒருபாற் படாஅ தொருவழித் தங்காது

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகங் களிமயக் குற்றென
விடுபரிக் குதிரையின் விரைந்துசென் றெய்திக்

கடுங்கண் யானையின் கடாத்திற மடக்கி
அணித்தேர்த் தானையொ டரசிளங் குமரன்
மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றிக்
காரலர் கடம்பன் அல்ல னென்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்

நாடக மந்தையர் நலங்கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத் தாங்கண்
சாளரம் பொளித்த கால்போகு பெருவழி
வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித்
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி

மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் றன்னை
மாதர் தன்னொடு மயங்கினை யிருந்தோய்
யாதுநீ யுற்ற இடுக்கண் என்றலும்

ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு
பாங்கிற் சென்று தன்றொழு தேத்தி
மட்டவி ழலங்கன் மன்ன குமரற்கு
எட்டி குமரன் எய்திய துரைப்போன்
வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்

தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமே கலையோடு
கோவல னுற்ற கொடுந்துயர் தோன்ற