105
110
115
120
125
1--6.
|
மாதவ ருறையிடம் ஒரீஇமணி மேகலை
தானே தமியளிங் கெய்திய துரையெனப்
பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி
மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும்
இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ
அனைய தாயினும் யாதொன்று கிளப்பல்
வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளந் தன்பா லுடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்
என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல்
சென்றவ னுள்ளஞ் சேரா முன்னர்ப்
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென்.
உரை
பரிதியஞ் செல்வன்
விரிகதிர்த் தானைக்கு - ஆதித்தனது விரந்த கதிர்களாகிய சேனைக்கு, இருள்
வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-இருள் முற்றப்பட்டா லொத்த மருட்கையுண்டாகும்
அழகிய பொழிலின்கண், குழல்இசை தும்பி கொளுத்திக் காட்ட- தும்பிகள் வேய்ங்குழலி
னிசையைப் பொருத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய-இளைய வண்டினங்கள்
நல்ல யாழினிசையை முரல, வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின்
கதிர் தோன்றுங்கால் தொட்டு மறையும் வரை சிறிதும் செல்லுதல் அறியாத குயிலும்
நுழைந்து செல்லுமாறு அடர்ந்த இளமரக்காவாகிய, மயில் ஆடு அரங்கில் மந்தி
|