4
பளிக்கறை புக்க காதை
|
|
அவிழ்ந்த வெள்ளிய மகரந்தப் பொடி
அளைந்த மணம் பொருந்திய இத் தாமரை மலரைக் காண்பாயாக ;
மாதர் - அழகு.
1"கோடுடை
தாழை" என்னும் பாடத்திற்குச் |
சங்கு உடைந்தாற்
போலும் தாழையின் மடல் என்க ; வால் வெண் : ஒரு பொருளிருசொல் ; தூய வெள்ளிய
என்றுமாம் ;
2"ஊர்தி
வால் வெள் ளேறே" என்பது காண்க. இது மலர் எனக் கூட்டி இம் மலர் என உரைக்க.
|
19--26. |
மாதர் நின்கண்
போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடி செங்கையின் - நின்னுடைய அழகிய
கண்களை நீலமலரென நினைந்து தாதுண்ணுமாறு அடைந்த வண்டினங்களை அகற்றுகின்ற நின்
சிவந்த கையைப்போல, அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து
பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து - மலர்ந்த தாமரை மலரிலே பாய்ந்து பிறழ்வனவாகிய
செங்கயல்களைக் கண்டு அழகிய சிறகு விரியுமாறு அப்பொழுதே பாய்ந்து, அது பெறாஅது
இரை இழந்து வருந்தி - அம் மீன்களைப் பெறாமல் இரையை இழந்து வருந்தி, மறிந்து
நீங்கு மணிச்சிரல் காண் - மீண்டும் நீங்குகின்ற நீலமணிபோலும் சிச்சிலியைகை
காண்பாயாக ; என - என்று சொல்லி, பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட -
சுதமதி பொழிலையும் பொய்கையையும் காட்டாநிற்க, மணிமேகலை அம் மலர்வனம்
காண்புழி - மணிமேகலை அப் பூம்பொழிலின் வளத்திளைக் காணும்பொழுது;
அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது, சாதியொருமை ; |
பிறழ்வனவென மேல்
வந்தமையின். இரை இழந்து - பெறாமையால் அவ்விரையை யிழந்தென்க. மணி - நீலமணி
;
3"புலவுக்கய லெடுத்த
பொன்வாய் மணிச்சிரல்" என்பது காண்க. சிரல் - சிச்சிலிப்புள் ; இது மீன்
கொத்தி யென்றும் கூறப்படும். முகம் தாமரைக்கும், கண் செங்கயலுக்கும், கை
சிரலுக்கும் உவமம் ;
4"பொருளே
யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃதுவம மாகும்" என்பதனால் பொருள்கள்
உவமமாகக் கூறப்பட்டன. பொய்கை வனத்தின் உறுப்பாகலின், வனங்காண்புழி யென
அதிலடக்கிக் கூறினர்.
|
27--8. |
மதிமருள் வெண்குடை
மன்னவன் சிறுவன் உதயகுமரன் - திங்களை யொத்த வெண்குடையையுடைய அரசன் புதல்வனாகிய
உதயகுமரன் ;
மருள் : உவமவுருபு ;
5"மதிமருள்
வெண்குடை" என்பது புறம். |
மன்னவன் - சோழன்.
1
சூளா- நாடு : 14.
2
புறம், கடவுள் வாழ்த்து.
3
சிறுபாண். 181.
4
தொல். உவம. 9.
5
புறம், 174.
|
|