மேகலையொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற - மாதவி பெற்ற மணிமேகலையைக்
கண்டதும் கோவலன் அடைந்த கொடிய துன்பம் நினைவில் வர அஃது, நெஞ்சு இறைகொண்ட
நீர்மையை நீக்கி - மனம் தங்குதல் கொண்ட தன்மையை நீக்கி, வெம்பகை நரம்பின்
என் கைச் செலுத்தியது - கொடிய பகை நரம்பின்கண் என் கையைச் செலுத்தியது
- இது யான் உற்ற இடும்பை என்றலும் இதுவே யான் அடைந்த துன்பம் என்னலும் ;
செப்பினுள் வைகிய மலர் புழுக்கத்தால் வாடும்; 1"மடைமாண்
செப்பிற்றமிய
வைகிய, பெய்யாப் பூவின் மெய் சாயினளே,"2"வகை
வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்," 3"வேயாது
செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தீயோடி சிற்றம் பலமனையாள்," என்பன
காண்க. மணிமேகலையைக் கண்டவுடன் கோவலனுற்ற துன்பம் நினைவிற்கு வந்தமையின்,
‘மணிமேகலையொடு...துயர்தோன்ற,'' என்றான் இறைகொண்ட-யாழிலே தங்கிய. பகை
நரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவது நரம்பு;ஆறாவதும் மூன்றாவதுமாகிய நரம்புகள்
என்று முரைப்பர் ; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்று பெற நிற்பது கூடமாகும்,"
என்பது காண்க. கோவலன் தன் குலத்தோன்றலாகலின் அவனுற்ற துயரை நினைந்து மயங்கினேனென்றானென்க.
72--7.
மதுமலர்த் தாரோன்
மனமகிழ்வு எய்தி-தேன் பொருந்திய மலர் மாலையினையுடைய உதயகுமரன் உளமகிழ்ச்சி
யடைந்து, ஆங்கவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி - அம் மணிமேகலையை என் அழகிய
தேரின்மீதேற்றி, ஈண்டு யான் வருவேன் என்று அவற்கு உரைத்தாங்கு-ஈண்டு யான்
வருவேன என்று எட்டி குமரற்குக்கூறி, ஓடு மழை கிழியும் மதியம்போல - ஓடுகின்ற
முகில் கிழிதற்குக் காரணமாகிய மதியம்போல, மாடவீதியில் மணித்தேர் கடைஇ
- மாடங்ளையுடைய வீதியின்கண் அழகிய தேரைச் செலுத்தி, கார் அணி பூம்பொழிற்
கடைமுகம் குறுக - வானளாவிய பூஞ்சோலையின் வாயிலினிடம் அடைய;
முனிவர் உறைவிடத்தினீங்கி மலர்வனமடைந்த மணிமேகலையை
இனி எளிதினெய்தலாமென
மனமகிழ்தானென்க. மாடங்கட்கு மழையும் தேருக்கு மதியமும் உவமை; மதியினை உதயகுமரனுக்கு
உவமை யாக்கலுமாம் . கலை நிரம்பினமையின்; இதற்கு மதியம்போலக் குறுக வென்றியைக்க.
கார் அணி - மேகத்தை மீது அணிந்த.
77--85.
அத் தேர் ஒலி
மாதர் செவிமுதல் இசைத்தலும் - அந்தத் தேர் ஒலியானது மணிமேகலையின் செவியிடம்
சென்று இசைத்தலும் சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்என-உதயகுமரன்
என்பால் வைத்த மனமுடையான்