வளர்இள வனமுளை மடந்தை மெல்லியல் - வளர்கின்ற வனப்புடைய இளங் கொங்கைகளையும்
மென்மைத் தன்மையையும் உடைய மணிமேகலை, தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ
- ஆடவர் தளர்ந்த சமயத்தை யறியும் தன்மையை யுடையவளோ, விளையா மழலை விளைந்து
மெல்லியல் முளை யெயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்-முதிராத மழலைமொழி முதிர்ந்து
மெல்லியலுக்கு முளை எயிறுகள் அரும்பி முத்துக்களை நிரைத்தன போன்றனவோ, செங்கயல்
நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும்கொல்-சிவந்த
கயல் மீன் போன்ற நீண்ட கண்கள் செவியின் பக்கத்தே ஓடிக் கொடிய கணைகளையுடைய
காமனின் வியப்பினை உரைக்கின்றனவோ, மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை என-மணிமேகலை சங்கத்தார் உறைகின்ற விடத்
தினின்றும் நீங்கித் தானே தனியளாய் இவண் எய்திய காரணத்தை உரைப்பாயாக
என;
இடை- செல்வி; 1"உடையார்
போல இடையின்று குறுகி"
என்பது காண்க.
முளை எயிறு - முளைபோலும் எயிறு ; முளைத்த எயிறுமாம். வெங்கணை-விருப்பத்தைச்
செய்யுங் கணையுமாம். வியப்பு- வியக்குஞ் செய்தி. செவிமருங்கோடுதல் - உரைப்பதுபோலு
மென்றானென்க. சங்கத்தை நீங்கினளாதலைத் தமியள் என்றான்.
105--10
பொதியறைப் பட்டோர்போன்று
உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி உரைக்கும் - தேன் பொருந்திய மலர்களையணிந்த
குழலினையுடைய சுதமதி சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக்
கூறுகின்றாள், இளமை நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப்
பருவத்தை நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறு கொண்டு வந்தார் இருவருடைய
சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய
கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு, அறிவும் சால்பும் அரசியல்
வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-நல்லறிவினையும் அமைதியையும்
அரசியல் நீதியையும் செறிந்த வளையையுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ;
கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு
2உரை
முடிவுகாணா னிளமையோ னென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச் சொல்லான்
முறைசெய்தான் சோழன் குலவிச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழி
வெண்பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய வேண்டி
வந்து