பக்கம் எண் :

பக்கம் எண் :62

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 
தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்" எனப் பரிமேலழகர் கூறியது ஈண்டு அறியற்பாலது. புனைவன - சந்தனம், மலர் முதலியன. மூப்பு என்பதும் பாடம். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-பகைமை நெடுங்காலம் நிகழ்வதாகிய சினம், அவலம் - வருத்தந்தோன்றி நிற்றல் ; கவலை - யாது செய்வலென்றல் ; கையாறு - மூர்ச்சித்தல் ; அழுங்கல் - வாய்விட் டழுதல் ; இது அரற்று எனவும் படும். புறமறிப் பாராய் - புறமறியாகப் பார்ப்பாயாக ; என்றது, பையை உள்புறமாக மறித்துப் பார்த்தல் போல் உடம்பையும் பார்க்கவென்றபடி; பார்ப்பின் இதன் தூய்து அன்மை விளங்கும் என்றவாறு; 1"மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்" 2 "பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து" என்பன காண்க. என்றாள் ; என்று அவளுரைத்த சொல் என வேறறுத்துரைக்க. "பளிங்கு......பாவை" என்னுங் கருத்து ; 3"பளிக்கறைப் பவழப் பாவை
பரிசெனத் திகழுஞ் சாயல்" எனச் சீவக சிந்தாமணியில் வந்துள்ளமை காண்க.

சுதமதி காட்ட மணிமேகலை மலர்வனம் காண்புழி, யானையின்

கடாத்திறம் அடக்கிவருவோனாகிய உதயகுமரன் எட்டிக்குமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன் இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம் குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள் வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல் அவனுள்ளஞ் சேராமுன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க

பளிக்கறை புக்க காதை முற்றிற்று.


1 நாலடி. 42.      2 இறை சூ. 1. உரை.      3 சீவக. 192,