முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :64
Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
10
15
20
25
30
35
40
ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து
தாழொளி மண்டபந் தன்கையில் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன்முக நோக்கிச்
சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன
எத்திறத் தாள்நின் இளங்கொடி யுறையெனக்
குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மைய ளென்றே
தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச்
சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்
செவ்விய ளாயினென் செவ்விய ளாகென
அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை
அஞ்செஞ் சாய லராந்தா ணத்துளோர்
விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே
கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை
ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை
ஈங்கிவள் தன்னொ டெய்திய துரையென
வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி
ஈங்கிவள் தன்னோ டெய்திய காரணம்
வீங்குநீர் ஞால மாள்வோய் கேட்டருள்
யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்
மழைவளந் தரூஉம் அழலோம் பாளன்
பழவினைப் பயத்தால் பிழைமண மெய்திய
எற்கெடுத் திரங்கித் தன்தக வுடைமையின
குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப்
பரந்துசென் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடன்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய
வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்