முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :65
Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
45
50
55
60
65
70
கியாங்ஙனம் வந்தனை யென்மக ளென்றே
தாங்காக் கண்ணீ ரென்றலை யுதிர்த்தாங்
கோத லந்தணர்க் கொவ்வே னாயினும்
காதல னாதலிற் கைவிட லீயான்
இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறுந் திரிவோ னொருநாள்
புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி
என்மக ளிருந்த இடமென் றெண்ணித்
தன்னுறு துன்பந் தாங்காது புகுந்து
சமணீர் காள்நுஞ் சரணென் றோனை
இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு
மையறு படிவத்து மாதவர் புத்தெமைக்
கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம்
அறவோ ருளிரோ ஆருமி லோமெனப்
புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற
மங்குறோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையைற் கொண்ட பாத்திர முடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன்
என்னுற் றனிரோ என்றெமை நோக்கி
அன்புட னளைஇய அருண்மொழி யதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திர மென்கைத் தந்தாங்
கெந்தைக் குற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் றழீஇக் கடுப்பத் தலையேற்றி
மாதவ ருறைவிடங் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி
சங்க தருமன் தானெமக் கருளிய
எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள்
உலக நோன்பிற் பலகதி உணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை யெய்த
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்