|
16
ஆதிரை பிச்சை இட்ட காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலைக்கு ஆதிரை என்னும்
|
|
|
பத்தினிப்பெண்டிர்
பாத்தூண் ஈத்த பாட்டு
]
|
|
|
|
|
|
ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர்
|
|
|
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்:
|
உரை
|
|
ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
|
|
|
சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி
|
|
5 |
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
|
|
|
|
|
|
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
|
|
|
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
|
|
|
கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின்
|
|
|
பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக்
|
|
10 |
காணம் இலிஎனக் கைஉதிர்க் கோடலும்,
|
உரை
|
|
|
|
|
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
|
|
|
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி,
|
|
|
நளிஇரு முந்நீர் வளிகலன் வௌவ
|
|
|
ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப
|
|
15 |
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
|
|
|
|
|
|
பக்கம் சார்ந்ததுஅவர் பான்மையன் ஆயினன்.
|
உரை
|
|
நாவாய் கேடுஉற நன்மரம் பற்றிப்
|
|
|
போயினன் தன்னோடு உயிர்உயப் போந்தோர்
|
|
|
இடைஇருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல்
|
|
20 |
உடைகலப் பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன்
|
|
|
|
|
|
சாதுவன் தானும் சாவுற் றான்என,
|
உரை
|
|
ஆதிரை நல்லாள் ஆங்குஅது தான்கேட்டு
|
|
|
ஊரீ ரேயோ ஒள்அழல் ஈமம்
|
|
|
தாரீ ரோஎனச் சாற்றினள் கழறிச்
|
|
25 |
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து
|
|
|
|
|
|
முடலை விறகின் முளிஎரி பொத்தி
|
|
|
மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப்
|
|
|
புக்குழிப் புகுவேன் என்றுஅவள் புகுதலும்,
|
உரை
|
|
படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும்
|
|
30 |
உடுத்த கூறையும் ஒள்எரி உறாஅது
|
|
|
|
|
|
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
|
|
|
சூடிய மாலையும் தொல்நிறம் வழாது
|
|
|
விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த
|
|
|
திருவின் செய்யோள் போன்றுஇனிது இருப்பத்,
|
உரை
|
35 |
தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்
|
|
|
|
|
|
யாது செய்கேன் என்றுஅவள் ஏங்கலும்,
|
|
|
ஆதிரை கேள்உன் அரும்பெறல் கணவனை
|
|
|
ஊர்திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி
|
|
|
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
|
|
40 |
பக்கம் சேர்ந்தனன் பல்லியாண்டு இராஅன்
|
|
|
|
|
|
சந்திர தத்தன் எனும்ஓர் வாணிகன்
|
|
|
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
|
|
|
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென
|
|
|
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்,
|
உரை
|
45 |
ஐஅரி உண்கண் அழுதுயர் நீங்கிப்
|
|
|
|
|
|
பொய்கைபுக்கு ஆடிப் போதுவாள் போன்று
|
|
|
மனங்கவல்வு இன்றி மனையகம் புகுந்துஎன்
|
|
|
கண்மணி அனையான் கடிதுஈங்கு உறுகெனப்
|
|
|
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்
|
|
50 |
அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
|
|
|
|
|
|
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்.
|
உரை
|
|
ஆங்குஅவள் கணவனும் அலைநீர் அடைகரை |
|
ஓங்குஉயர் பிறங்கல் ஒருமர நீழல்
|
|
|
மஞ்சுஉடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து
|
|
55 |
துஞ்சுதுயில் கொள்ள, அச் சூர்மலை வாழும்
|
|
|
|
|
|
நக்க சாரணர் நயம்இலர் தோன்றிப்
|
|
|
பக்கம் சேர்ந்து பரிபுலம் பினன்இவன்
|
|
|
தானே தமியன் வந்தனன் அளியன்
|
|
|
ஊன்உடை இவ்வுடம்பு உணவுஎன்று எழுப்பலும்,
|
உரை
|
60 |
மற்றவர் பாடை மயக்குஅறு மரபின்
|
|
|
|
|
|
கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்
|
|
|
சுற்று நீங்கித் தொழுதுஉரை யாடி
|
|
|
ஆங்குஅவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்
|
|
|
ஈங்குஎம் குருமகன் இருந்தோன் அவன்பால்
|
|
65 |
போந்துஅருள் நீஎன அவருடன் போகி,
|
|
|
|
|
|
கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
|
|
|
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
|
|
|
எண்குதன் பிணவோடு இருந்தது போலப்
|
|
|
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்
|
|
70 |
பாடையில் பிணித்துஅவன் பான்மையன்
ஆகிக்
|
|
|
|
|
|
கோடுஉயர் மரநிழல் குளிர்ந்த பின்அவன்
|
உரை
|
|
ஈங்குநீ வந்த காரணம் என்என
|
|
|
ஆங்குஅவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்,
|
|
|
அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்
|
|
75 |
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
|
|
|
|
|
|
நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து
|
|
|
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்என,
|
|
|
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து
|
|
|
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்,
|
உரை
|
80 |
பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு
|
|
|
|
|
|
உண்டோ ஞாலத்து உறுபயன் உண்டு எனில்
|
|
|
காண்குவம் யாங்களும் காட்டுவா யாக எனத்
|
|
|
தூண்டிய சினத்தினன் சொல்எனச் சொல்லும்:
|
உரை
|
|
மயக்கும் கள்ளும் மன்உயிர் கோறலும்
|
|
85 |
கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:
|
|
|
|
|
|
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
|
|
|
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
|
|
|
நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
|
|
|
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
|
|
90 |
உண்டுஎன உணர்தலின் உரவோர் களைந்தனர்
|
|
|
|
|
|
கண்டனை யாகென, கடுநகை எய்தி
|
உரை
|
|
உடம்புவிட்டு ஓடும் உயிர்உருக் கொண்டுஓர்
|
|
|
இடம்புகும் என்றே எமக்குஈங்கு உரைத்தாய்
|
|
|
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை
|
|
95 |
செவ்வனம் உரைஎன, சினவாது இதுகேள்
|
உரை
|
|
|
|
|
உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி
|
|
|
மற்றைய உடம்பே மன்உயிர் நீங்கிடில்
|
|
|
தடிந்துஎரி ஊட்டினும் தான்உண ராதுஎனின்
|
|
|
உடம்பிடைப் போனதுஒன்று உண்டுஎன உணர்நீ
|
|
100 |
போனார் தமக்குஓர் புக்கில்உண்டு என்பது
|
|
|
|
|
|
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
|
|
|
உடம்புஈண்டு ஒழிய உயிர்பல காவதம்
|
|
|
கடந்துசேண் சேறல் கனவினும் காண்குவை
|
|
|
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
|
|
105 |
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ
|
|
|
|
|
|
என்றுஅவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்
|
உரை
|
|
நன்றுஅறி செட்டி நல்அடி வீழ்ந்து
|
|
|
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு
|
|
|
உள்உறை வாழ்உயிர் ஓம்புதல் ஆற்றேன்
|
|
110 |
தமக்குஒழி மரபின் சாவுறு காறும்
|
|
|
|
|
|
எமக்குஆம் நல்அறம் எடுத்துஉரை என்றலும்,
|
உரை
|
|
நன்று சொன்னாய் நல்நெறிப் படர்குவை
|
|
|
உன்தனக்கு ஒல்லும் நெறிஅறம் உரைக்கேன்
|
|
|
உடைகல மாக்கள் உயிர்உய்ந்து ஈங்குஉறின்
|
|
115 |
அடுதொழில் ஒழிந்துஅவர் ஆர்உயிர் ஓம்பி,
|
|
|
|
|
|
மூத்துவிளி மாஒழித்து எவ்வுயிர் மாட்டும்
|
|
|
தீத்திறம் ஒழிகென, சிறுமகன் உரைப்போன்
|
|
|
ஈங்குஎமக்கு ஆகும் இவ்வறம் செய்கேம்
|
உரை
|
|
ஆங்குஉனக்கு ஆகும் அரும்பொருள் கொள்கெனப்
|
|
120 |
பண்டும் பண்டும் கலம்கவிழ் மாக்களை
|
|
|
|
|
|
உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்குஇவை
|
|
|
விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு
|
|
|
இவைஇவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து
|
|
|
சந்திர தத்தன் என்னும் வாணிகன்
|
|
125 |
வங்கம் சேர்ந்ததில் வந்துஉடன் ஏறி
|
|
|
|
|
|
இந்நகர் புகுந்துஈங்கு இவளொடு வாழ்ந்து
|
|
|
தன்மனை நன்பல தானமும் செய்தனன்,
|
உரை
|
|
ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்
|
|
|
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென,
|
|
130 |
மனையகம் புகுந்து மணிமே கலைதான்
|
|
|
|
|
|
புனையா ஓவியம் போல நிற்றலும்
|
|
|
தொழுது வலம்கொண்டு துயர்அறு கிளவியோடு
|
|
|
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்
|
|
|
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
|
|
135 |
ஆதிரை இட்டனள் ஆர்உயிர் மருந்துஎன்.
|
உரை
|
|
|
|
|
|
|
|
ஆதிரை
பிச்சை இட்ட காதை முற்றிற்று.
|
|
|