ஐந்திலிரு பகுதி தமிழேயென்றும், வடமொழியே தமிழ்த் துணையின்றி
வழங்காதென்றும்,
இவ்வுண்மை அண்மையிலேயே வெட்ட வெளிச்சமாகுமென்றும், அவர் அறிவாராக.
செய்யுள் வழக்கு, குறிப்பிட்ட சொற்களையும்,
சொல் வடிவுகளையுமே வழிவழி வழங்கி வருவதாலும், சுருங்கச் சொல்லல் என்னும் அழகைப் பெரிதாகப்
பேணுவதாலும், உலக வழக்கினின்று மிகவும் நடைவேறுபட்டதாகும்.
பண்டைச் செய்யுளிளெல்லாம் காடை,
கதுவாலி என்னும் பறவைகள் குறும்பூழ், சிவல் என்னும் சொற்களாலேயே முறையே குறிக்கப் பெறும்.
செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செய்ம்மன, செயின் முதலிய
செய்யுள் வினையெச்ச வடிவுகள் உலக வழக்கிலும் செய்துகொண்டு, செய்கிறதற்கு, செய்தால், செய்துவிட்டால்
முதலிய உலக வழக்கு வினையெச்ச வடிவுகள் செய்யுள் வழக்கிலும் இடம் பெறுவதில்லை.
முழுங்கு என்னும் வடிவே மூலமாயினும்,
அதன் திரிபான விழுங்கு என்பதே செய்யுட்கேற்றதாகக் கொள்ளப்பெறும். இங்ஙனமே
மிஞ்சு என்பதினும் அதன் திரிபான விஞ்சு என்பதே சிறந்ததாம். கொண்டுவா
என்பதன் திரிபான கொண்டா என்பது செய்யுளில் இடம் பெறாது; ஆயின் கொண்டா
என்பதன் திரிபான கொணா, கொணர் என்பவை இடம்பெறும்.
மக்களை உயர்ந்தோர்,
ஒத்தோர், இழிந்தோர் என மூவகுப்பாராக வகுத்து அதற்கேற்ப ஈறுகொடுத்துப்
பெயரையும் வினையையும் ஆள்வது முற்றும் உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று. ஒருமை பன்மை
என்னும் எண் பகுப்பே செய்யுட் குரியதாம்.
|
|
பெயர் |
வினை |
|
இழிந்தோன் |
நீன், நீ, அவன் |
வா, வந்தான் |
|
ஒத்தோன் |
நீம், நீர் (நீயிர்) அவர் |
வாரும், வந்தார் |
|
உயர்ந்தோன் |
நீங்கள், அவர்கள் |
வாருங்கள், வந்தார்கள் |
|
ஒருவரைக்
கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல.
|
|
(தொல்.
510)
|
என்று தொல்காப்பியம் தெளிவாகக் கூறுதல் காண்க.
இனி வினையின் முக்கால வடிவும் ஆங்கிலத்திற்போல்
தனித்தனி தனிப்பு (Indefinite)
, தொடர்ச்சி
(Continuous)
, நிறைவு (Perfect)
,
நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous)
என்னும் நால்வகை கொண்டியங்குவதும், தமிழில் உலக வழக்கே அன்றிச் செய்யுள் வழக்கன்று.
சிலர் செய்யுள் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, உலக வழக்கிற்குச் சிறப்பாக
உரிய கூறுகளையெல்லாம், பிற்காலத்தனவாகக் கூறுவர். அவர்
மொழியியலை
|