எ-டு :
|
ஆடினிர் பாடினிர் செலினே
|
(புறம் - 109 :17)
|
ஆடினிர்
பாடினிர் = ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், இட வேற்றுமை உருபேற்ற தொழிற் பெயரும் இலக்கிய
வழக்கில் தொடர்ச்சி வினைப் பொருளுணர்த்தும்.
எ-டு : தட்டுப்புடைக்கண் - தட்டுப்புடைத்துக்
கொண்டிருந்த (கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கும்) போது.
நிறைவுத் தொடர்ச்சி செய்யுளில்
இடம் பெறாது.
செய்யுள் வழக்கு உலக வழக்கினின்று
பெரிதும் வேறுபட்டும், தமிழ் தமிழத் தமிழ்ப் பெரும்புலவரும் மருளுமாறு தொன்முது தோற்றத்ததாயும்,
இருக்கவும், செக்கோசிலோவோக்கிய நாட்டு கொச்சைத் தமிழ்ப் புலவரான காமில் சுவெலபில்
என்பார், ஆரிய முறையில் தமிழைச் சில்லாண்டு கற்றபின் தம்மைத் தமிழ்ப் பேரதிகாரியாகக்
கருதி, நற்றிணையென்னும் பண்டை அகப்பொருட் செய்யுட் பனுவலையும், நாலுவேலி நிலம் என்னும்
இற்றைக் கடுங்கொச்சைத் தமிழ் உரைநடை நாடகப் பனுவலையும் அடிப்படையாகக் கொண்டு நரி தன்வாலை
விட்டுக் கடலாழங் கண்டாற்போல் தமிழின் தொன்மையை ஆய்ந்து அதன் தோற்றம் கி. மு 1500
என்று வரையறுத்திருப்பது, தன்னாராய்ச்சி இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கு எத்துணை
அறிவியல் உண்மையாகக் காட்சியளிப்பினும், முறைப்பட்ட மொழி யாராய்ச்சியாளர்க்கு எத்துணை
நகையாட்டிற்குரிய பகடிக் கூத்தாம்.
இனி,
|
செந்தமிழ்
சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி
|
(தொல்.
883)
|
என்னும் தொல்காப்பிய நூற்பாவைப் பிறழவுணர்ந்து தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் முதலிய (திரவிடம் என்னும்) கொடுந்தமிழ் மொழிகளின் கொச்சைச் சொற்களையே
திசைச் சொல்லென்று, இலக்கண நூலார் கொண்டதாகக் கூறுவாருமுளர். கொடுந்தமிழ் மொழிகளின்
பெரும்பாற் சொற்கள் கொச்சை முறையில் திரிந்திருப்பினும், அவையல்லாத, திருந்திய வடிவுச்சொற்களையே
தேவையான இடத்துச் செந்தமிழார் மேற்கொண்டனர் என்பதை அறிதல் வேண்டும்.
"தென்பாண்டி
நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும் குட்டநாட்டார் தாயைத் தள்ளை யென்றும்,
நாயை ஞெள்ளை யென்றும்; குடநாட்டார் தந்தையை அச்சனென்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை
எலுவனென்றும், தோழியை இகுளையென்றும், தம்மாமி யென்பதனை தந்துவையென்றும்; பூழி நாட்டார்
நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி யென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறு வென்றும்,
சிறு குளத்தை கேணி யென்றும்; அருவா வடதலையார் குறுணியை குட்டை யென்றும் வழங்குப."
"இனிச் சிங்களம் அந்தோ வென்பது;
கருநடம் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டி
|