பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 50

9

திரு என்னும் சொல்
தென்சொல்லா, வடசொல்லா?

தமிழில் தற்பவமாக, அதாவது வடசொல் திரிபாக அல்லது சிதைவாக ஒரு சாராரால் கருதப்படும் சொற்களில் திரு என்பதும் ஒன்று.

  நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திலும்.

  திருவுடைத் திருமனையது தோன்று கமழ்புகை (379)

  விட்டோரை விடாஅள் திருவே (358)

  திருவி லல்லது கொலைவில் லறியார் (20)

என்று புறநானூற்றிலும்.

  திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்

சேருந் திறனறிந் தாங்கே திரு

திருநுதல் நல்லவர் நாணுப் பிற

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
(168)

(179)

(1011)

(1072)

என்று திருக்குறளிலும்.

  இருநிலங் கடந்த திருமறு மார்பின் (29)

என்று பெரும்பாணாற்றுப்படையிலும்

திருநுதல் (2:41), திருத்தக்கீர் (11:111), திருஞெமிரகலம் (28:157), திருமொழி (10:12), திருமகள் (5:213), திருமால் (17) என்று சிலப்பதிகாரத்திலும், இங்ஙனமே பிற நூல்களிலும் திரு என்னும் சொல் பல்வேறு பொருள்களில் வழங்கப்பட்டுள்ளது.

உலக வழக்கில் திருக்கலியாணம், திருக்கார்த்திகை, திருக்குறள், திருக்கூத்து, திருநாள், திருநீறு, திருப்பணி, திருப்பதி, திருப்பதிகம், திருப்பாற்கடல், திருப்புகழ், திருமகள், திருமான், திருமங்கலம், திரு மங்கலியம், திருமணம், திருமலை, திருமால், திருமுகம், திருமுடி, திருமுறை, திருமுன், திருமேனி, திருவடி, திருவரங்கம், திருவருள், திருவள்ளுவர், திருவாக்கு, திருவாசிகை, திருவாடுதண்டு, திருவாய் மலர்தல், திருவிழா, திருவிளக்கு,