பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 51
51

திருவிளையாடல், திருவுளம், திருவேங்கடம், திருவோடு முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன.

தெய்வப் பெயர், அடியார் பெயர், தெய்வத்தின் அல்லது தெய்வத் தொடர்புள்ள சினைப்பெயர், ஆடையணிப் பெயர், உணவுப் பெயர், வினைப் பெயர், இடப்பெயர், நூற்பெயர் முதலியன, தம் தூய்மையைக் குறித்தற்குத் திரு என்னும் அடைபெறுவது தொன்றுதொட்ட வழக் காகும்.

எ-டு :

  தெய்வப் பெயர்

திருமுருகன்

  அடியார் பெயர் திருக்கண்ணப்பர், திருமழிசையாழ்வார்
  சினைப் பெயர் திருச்செவி, திருக்கண் மலர்
  ஆடையணிப் பெயர் திருப்பரிவட்டம், திருமாலை, திருக்கைக்காறை
  உணவுப் பெயர் திருக்கன்னலமுது, திருப்படிமாற்று
 

வினைப் பெயர்

திருப்பள்ளியெழுச்சி, திருவூறல், திருக்காட்சி, திருக்கை வழக்கம்.
  இடப்பெயர் திருக்கற்றளி, திருமுற்றம், திருப்பரங்குன்றம்
 

நூற் பெயர்

திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்கடைக்காப்பு
  பொருட் பெயர் திருவலகு, திருப்படிக்கம், திருமுட்டு
  குணப் பெயர் திருக்குறிப்பு, திருக்கோலம்
  வாத்தியப் பெயர் திருச்சின்னம், திருத்தாளம

அரசர் தெய்வத் தன்மையுள்ளவராகக் கருதப்பட்டதினால், அவர் தொடர்புள்ள சொற்களும் திரு என்னும் அடைபெற்றன.

எ-டு : திருவாய்க் கேள்வி, திருமந்திரவோலை, திருமாடம், திருமுகக் கணக்கு, திருமுகக்காணம், திருவாணை, திருமூப்பு, திருவாண்டெழுத்திடுதல், திருநல்லியாண்டு, திருக்கைச் சிறப்பு.

அடியார்கள் தெய்வத்தன்மையுள்ளவராதலின், அவர்களொடு தொடர்புற்றவற்றின் பெயர்களும் திரு என்ற அடைபெறும்.

எ-டு : திருக்குகை, திருக்கூட்டம், திருக்கோவை, திருமடம், திருத்தொண்டர், திருநாள், (திருநட்சத்திரம்), திருவேடம்.

திருமகன், திருமகள் முதலிய பெயர்களில் திரு என்னும் அடைமொழி பிரிக்கமுடியாதவாறு பிணைந்துள்ளது.

திரு என்னுஞ் சொல் மேற்கூறியவாறு அடைமொழியாய் மட்டுமன்றி, தனிச் சொல்லாகவும் வந்து முறையே செல்வம், சிறப்பு, அழகு, ஒளி, செழிப்பு,