பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 52
52

பேறு (பாக்கியம்), தெய்வத்தன்மை, தூய்மை, நன்மை, நல்வினை, கணியன் (சோதிடன்), மங்கலம், மங்கிலியம், ஒருவகைத் தலையணி, மார்பில் தோன்றும் வீற்றுத் தெய்வம் முதலிய பொருள்களைத் தரும்.

இவற்றுள், செல்வம் என்னும் பொருளே முதல் தோன்றியதும் பிறவற்றுக்கெல்லாம் அடிப்படையுமாகும்.

  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
(குறள். 751)
   
  ............................................................................. ............................................................................. இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
(குறள். 751)

என்பவற்றால் சிறப்பும்.

''அன்னமொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' என்றும் எளிய இனத்தாரைக் காரொக்கல் (கரிய சுற்றத்தார்) என்றும்,

, "தரித்திரம் மிக்க வனப்பினை யொடுக்கிச் சரீரத்தை யுலர்த்தா வாட்டும்" என்றும் கூறுவதால் அழகும் ஒளியும்;

"திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேனே யென்னும்" என்பதால் தூய்மையும் செல்வத்தாலுண்டாதல் காண்க. இங்ஙனமே பிறவும்.

திரு என்னும் சொல், முதலாவது பொருட் பெயராய்ப் பின்பு பண்புப் பெயராயும் வழங்கி வருகின்றது. இச் சொல்லினின்று திருமை (கந்த. முதனாட்.35) திருவம் (சிலப்.12) முதலிய பண்புப் பெயர்களும், திருவன் (திவ். இயற். 2, 84) திருவாளன் (திவ். பெரியதி. 5, 5, 1) திருவாட்டி (திருக்கோ. 294 உரை) முதலிய உயர்திணைப் பெயர்களும் தோன்றியுள்ளன.

  திருவன் }  
    = 1. செல்வன், பெருமகன்: 2. திருமால்
  திருவாளன்  
       
  திருவாட்டி   = 1. செல்வி, பெருமகள்; 2. திருமகள்; 3. தேவி.

திருவன் என்னும் பெயர் பெண்பாலில் திருவி என்றாகும்.

திரு என்னும் சொல்லின் ''வேர்''

உயிரெழுத்துகளில் ஈகாரம் அல்லது இகரம் அண்மைச் சுட்டும் கீழ்மைச் சுட்டும் பின்மைச் சுட்டுமாகும்.

அண்மைச் சுட்டை, இவன், இது, இங்கு, இவன் முதலிய சொற்களாலும்; கீழ்மைச் சுட்டை, இகம், இகு, இழி, இளி, இறங்கு முதலிய சொற்களாலும், பின்மைச்சுட்டை இடை, இடறு, இணுங்கு, இழு, இரை, இறை முதலிய சொற்களாலும் அறியலாம். (இதன் விரிவை எனது சுட்டுவிளக்கம் என்னும் சுவடியிற் கண்டுகொள்க.)