இரை என்னுஞ் சொல்லுக்கு, ஒலித்தல், சீறுதல்,
மூச்சுவாங்குதல், வீங்குதல் முதலிய வினைப்பொருள்களும், ஒலி, அஃறிணை யுயிரிகளின் உணவு, நாகப்பூச்சி
முதலிய பெயர்ப் பொருள்களும் உள்ளன. இவற்றுள் மூச்சுவாங்குதல், வீங்குதல், உணவு, நாகப்பூச்சி
என்னும் பொருள்கள், இழுத்தல் என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்டன.
மூச்சிழுத்தலுக்கும், மூச்சிழுக்கும் ஈளை (காச) நோய்க்கும்
இரைப்பு என்றும் இழுப்புள்ள மாந்த நோய்க்கு இரைப்பு மாந்தம் என்றும், இழுப்பை யுண்டாக்கும்
எலிக்கு இரைப்பெலி என்றும் பெயர்.
இகரச் சுட்டடிப் பிறப்பினாலும் ரகர ழகரப் போலியாலும்
இழுப்புப் பொருளாலும் இரை என்னுஞ் சொற்கு இனமானதாகும். இரை என்னுஞ்சொல் முதலில் தகரமெய்
பெற்றுத் திரை என்றாகும். திரைத்தல், இழுத்தல். வேட்டியை இழுத்துக் கட்டுதலைத் திரைத்துக்
கட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. ஆடையை இழுத்தி ழுத்து வைத்தாற்போன்ற அலைக்கும், தோற்சுருங்கற்கும்,
ஒருபுறமாகவும் கீழாகவும் இழுக்கப்படுகின்ற படுதாவுக்கும், திரை யென்னும் பெயரிருத்தலை நோக்குக.
இரை - திரை, ஒ.நோ: ஏண் - சேண்.
ஆடையாவது நீராவது திரையும்போது, திரைந்தவிடத்தில் திரட்சி
யுண்டாவதால், திரைதலுக்குத் திரளுதல் என்னும் பொருளும் உண்டாயிற்று. பால் திரளுதலைத் திரைதலென்று
கூறுவதை நோக்குக. திரள் என்னுஞ் சொல்லும் திரை என்பதினின்று திரிந்ததே. அலையானது ஓரிடத்திலில்லாமல்
இடைவிடாது அலைந்து கொண்டிருப்பதால், அலைதல் வினை அலையைக் குறிக்கும் திரை என்னும் சொல்லின்
திரிபான திரி என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது.
திரு என்னுஞ் சொல் மேற்கூறிய திரை, திரள், திரி என்னும்
மூன்று சொற்கும் சொல்லாலும் பொருளாலும் இனமாகும். திரை போல் ஓரிடத்திலில்லாமல் என்றும்
அலைந்துகொண்டிருப்பது என்னும் பொருளிலாவது, மக்களால் திரட்டப்படுவது என்னும் பொருளிலாவது,
செல்வத்திற்குத் திரு என்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.
|
ஆறிடு
மேடு மடுவும்போ லாஞ்செல்வம்
அகடுற
யார்மாட்டு நில்லாது செல்வஞ்
சகடக் கால்போல் வரும்
|
|
என்று கூறியதனாலும், செல்வம் என்னும் பெயருக்குச் செல்வது என்பது பொருளாதலாலும்,
செல்வம் நிலையற்றது என்றும், ஆக்கப்படுவதால் ஆக்கம் என்றும் தேடப்படுவதால் தேட்டு என்றும்
செறிந்திருப்பதால் வெறுக்கை யென்றும் பெயர் பெற்றிருப்பதினால் செல்வம் திரட்டப்படுவது
என்றும், இரு கருத்துகள் நம் முன்னோர்க்குத் தோன்றியிருந்தமை புலனாம். இவ் |