பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 58
58

தம் ஒப்பியலிலக்கணத்தில் ஆங்காங்கு மிகவெடுத்துரைத்துச் செல்லுதல் காண்க.

முன்னிலைப் பெயர்: ஊன் - உன் (ஒருமை). ஊம்-உம் (பன்மை)

உவன், உவள், உவர், உது, உவை, உங்கு என்பன முன்னிலைப் பொருள்களையும் இடத்தையுமே குறித்தலால், உகர அல்லது ஊகாரச் சுட்டு முன்மைச் சுட்டே. முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்டதாதலால், இடைமைச் சுட்டென்பது ஒருமருங்கு பொருந்தும். ஆயின், சேய்மைக்கு வரம்பில்லையாதலால், முன்மை இடைமையாகலாம். இடைமை என்றும் முன்மையாகாது.

முன்மை அண்மைக்குச் சற்றுச் சேய்மையாதலால் முன்மைச்சுட்டு, தமிழிற் சிறுபான்மை சிறு சேய்மையையும் வடநாட்டு மொழிகளிற் சேய்மையையும் உணர்த்தும்.

 
எ-டு :
உங்கு = நீ (நீங்கள்) "இருக்குமிடத்து தனயரைக் கண்
 
டிரோ வுங்கணென்ன" (சேதுபு 6:39)
உதோள் - உதர் (இந்தி) = அங்கு.
முன்மைக் கருத்தினின்று முற்செலவுக் கருத்துத் தோன்றும்.

 
எ-டு :
உய் = முன்செல், முற்செலுத்து, உந்து = முன்தள்ளு.
 
உகை = முற்செலுத்து.

நில மட்டத்திற்கும் நீர் மட்டத்திற்கும் மேற்பட்ட முற்செலவு பக்கவாட்டிலும் மேனோக்கியுமிருக்குமாதலால் முன்மைச்சுட்டு உயர்ச்சிக் கருத்தையுந் தழுவும்.

 
எ-டு :
உக்கம் = கட்டித் தூக்குங் கயிறு, உகப்பு = உயர்வு.
 
உகள்தல் = குதித்தல். உகளித்தல் = குதித்தல். உகைத்தல் = எழுதல். உச்சம் = உயர்நிலை.உச்சி=உயரிடம்.

 
உத்தரம் =
(1) முகட்டுக் குறுக்குப் பெருமரம் அல்லது இருப்பு விட்டம்.
 
(2) மேற்மடங்கல் = கூற்றுவன், கூற்றுவன் போல் அழிக்குந்தீ பட்டது.உத்தரமந்திரி = தலைமையமைச்சன்.

உப்புதல் = பருத்தெழுதல்

உம்பல் = உயர்ந்த யானை

உம்பர் = , மேலுலகம், தேவர்

உம்பன் = உயர்ந்தோன்

உயர்தல் = மேலெழுதல், மேற்படுதல்

உவண் = மேலிடம், உவணம் = உயரப் பறக்கும் கலுழன்.

உவணை = தேவருலகம்.

உறி = உயரக் கட்டித் தூக்குங் கயிறு அல்லது தொடரி.