உன்னுதல் = உயரக்
குதித்தல்
ஊர்தல் = ஏறிச் செல்லுதல்
ஊங்கு = உயர்வு, மேன்மை
உத்தரம் = 1.
பனிமலையால் உயர்ந்த திசையான வடக்கு (திவா)
|
Uttara
,
mfn cp. fr. 1. ud; opposed to adbara. upper, higher, superior (e.g.
uttare
dantas,
|
|
the
upper teeth), RV; AV, TS: CHUP; Ragh, and c.; northern (becausethe
northern
part
|
|
of India is high), AV; Mn; Susr.; pancat & c."
என்று மானியர்வில்லியம்சு சமற்கிருத -ஆங்கில அகரமுதலி கூறுதல் காண்க. |
2.
வடக்கில் தோன்றும் ஊழித்தீ (பிங்.)
உத்தர மடங்கல்
= வடவனல் என்னும் ஊழித்தீ (திவா.).
குமரிநாட்டுக் காலத்தில் தமிழர் (நெய்தல்நிலப் பரவர்)
சுற்றுக் கடலோடிகளா யிருந்ததனால், வடமுனையில் அவ்வப்போது தோன்றும் ஒரு பல்வண்ண வொளியைக்
கண்டு, அதற்கு வடவை அல்லது வடவனல் என்று பெயரிட்டனர்; அதையே ஊழி யிறுதியில் உலகை யழிக்கும்
தீயாகவும் கருதினர்.
|
வடவா
வனலு மடநடைப் பிடியும்
அருமைப் பெயருங் குதிரையும் வடலை
|
|
(பிங்.
988)
|
|
வடவைக்
கனலைப் பிழிந்தெடுத்து
|
(அந்தகக்.
தனிப்.)
|
|
வெள்ளத்
திடைவாழ் வடவனலை
|
(கம்பரா.
தைலமா. 86)
|
|
கடுகிய
வடவனலத் தினைவைத்தது
அனல் - அனலம்
|
(கலிங்.
402)
|
|
அக்கடலின்
மீதுவட வனல்நிற்க வில்லையோ
|
(தாயு,
பரிபூர .9)
|
மேலையர் வடவனலை,
Aurora (down) Borealis (northern
) என்று இலத்தீனிலும்
northernlight என்று ஆங்கிலத்திலும், வழங்குவது
முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.
வடமொழியாளர் வடவை என்னும் தென்சொல்லை, வடவா, வடவா
முகம், வடவாமுகாக்கினி, படபா, படபாமுகம், படபாமுகாக்கினி என்று திரித்தும் விரித்தும்,
பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று, பொருந்தாப் பொய்த்தலாகப் பொருள்கூறுவர்.
அதைத் தமிழர் நம்பிய பின்னரே "வடவைக் கனன்மாவும்" (தக்கயாகப். 694) என்று ஒட்டக்கூத்தரும்
பாடநேர்ந்தது. இதனால், தமிழ்ச்சொல் திரிக்கப்பட்டதொடு தமிழர் மதியும் திரிக்கப்பட்டமை
காண்க.
|