ஆங்கிலக் கல்வியும் அறிவியல் ஆராய்ச்சியும் நம் நாட்டில்
புகுந்து ஒன்றரை நூற்றாண்டும், தமிழ் தனி வளமொழியெனக் கால்டு வெல் கண்காணியார் நாட்டி ஒரு
நூற்றாண்டும் ஆகியும் இன்றும் தமிழின் தனித்தன்மையைப் பற்றிப் பல பேராசிரியரும் ஐயுற்று
வருவதால் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும், வேரும் ஆக்கமும் காட்டி இன்னின்னது தென் சொல்லே
யென நாட்ட வேண்டும் நிலைமை நேர்ந்துள்ளது.
|
கண்ணுதற்
பெருங் கடவுளுங்கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததாஎண்ணவும் படுமோ!
|
|
என்று பரஞ்சோதி முனிவர் பாடுமாறு தமிழிலக்கணம், தனிப்பட்டதாயும் பிற
மொழிகட்கில்லாத பொருளிலக்கணத்தைத் தன்னகத்துக் கொண்டு தலைமை வாய்ந்ததாயும் கி. மு.
பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி வளர்ந்த தொன்மையுள்ளதாயும், இருந்தும்
அதன் குறியீடுகளில் ஒன்றாகவும் பொருட் படல இயற்பெயர்களுள் ஒன்றாகவும் உள்ள "உவமை" என்னும்
சொல் வடசொல்லா தென்சொல்லா என்னும் ஐயுறவிற்கும் வடசொல்லே என்னும் வலிப்பிற்கும் சொல்லாராய்ச்சியும்
மொழியாராய்ச்சியும் மிக்க இக்காலத்து இடந்தந்து நிற்பது மிக மிக இரங்கத்தக்க செய்தியாகும்.
உவமை யென்னுஞ் சொல் ஒப்புமை யென்னுஞ் பொருளது. இப் பொருள்
அதன் முழுவடிவில் மட்டுமின்றி அதன் அடிவேரான உகரத்திலேயே கருக்கொண்டுள்ளது. உகரமாகிய ஓரெழுத்
தொருமொழி ஒப்புமைக் கருத்துக் கொண்டிருப்பதை உத்தியென்னுஞ் சொல்லால் உணரலாம். உத்தல்=
பொருந்துதல் உத்தி = பொருத்தம். மதிக்கும் அறிவிற்கும் பொருத்தமான செய்தி உத்தி எனப்படும்.
அவ் வுத்தியை அறியும் அகக்கரணத்தையும் உத்தி யென்பது ஆகுபெயர். நூலிற்கும் உரைக்கும் பயன்படும்
உத்திகளான நெறி முறைகள் முப்பத்திரண்டாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. இவ் வுத்தியை யுக்தி எனத்
திரித்தாள்வர் வடநூலார்.
இரு கட்சியர் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் கட்சியமைத்தற்கு
இவ்விருவராய்ப் பொருந்தி வருவதை உத்தி கட்டுதல் என்பர்.
|