கட்டுதல் என்னும் சொல் வழக்கே
உத்தியென்னும் சொற்குப்பொருத்தப் பொருளுண்மையை உணர்த்தப் போதிய சான்றாகும். கட்டுதல்,
பொருத்துதல். கள்ளுதல், பொருந்துதல். கள்ள என்பது பொருந்த என்று பொருள்படும் ஓர் உவம
உருபு. "கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ" என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. (1232) ''கள்''
என்னும் பகுதியினின்று பிறந்ததே களம் (கூட்டம், அவை) என்னும் தொகுதிப் பெயரும். கட்சி
(கள் + சி) என்னும் பெயரும் இப் பகுதியதே.
சென்னைப் பல்கலைக்கழக அகராதி விளையாட்டு உத்திச்
சொல்லைத் தெலுங்குச் சொல்லென்று பிறழக்கொண்டதோடு, நூலுத்திச் சொல்லினின்று வேறுபட்ட
தெனவுங் கூறியுள்ளது. உத்தி யென்பதனொடு தொடர்புற்ற உந்து என்னும் சொல் பொருந்துதற் பொருள்படுவது
கவனிக்கத்தக்கது.
"தானந் தோறும் உந்திடுங் கரணம்" என்பது சிவஞான சித்தியார்.
(4, 34)
தமிழில் ஏறத்தாழ முக்காற் பகுதி உகரவடிச் சொற்கள்.
உகரவடி, சொல்லாக்கத்தில்
(1) முன்னைத் திரிபு
(2) அள்ளைத் திரிபு
(3) பின்னைத் திரிபு
என மூவகைத் திரிபடையும். உகரம் ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு; உகரம்
அகரமாவது அள்ளைத் திரிபு; உகரம் இகரமாவது பின்னைத் திரிபு; முன்னைத் திரிபு என்றும் மோனை
யாகவே யிருக்கும்.
எ-டு :
|
புழை - பூழை |
} |
|
|
|
முன்னைத் திரிபு |
|
புழை - பூழை |
|
|
|
|
|
|
முடங்கு - மடங்கு |
|
அள்ளைத் திரிபு |
|
|
புரள் - பிறழ் |
பின்னைத் திரிபு |
இவற்றுள் பின்னிரண்டும் மோனையாகவும்
தொடரும். அவை அள்ளை மோனை, பின்னை மோனை எனப்படும்.
எ-டு : |
குளியம்
|
- |
கூளி, கொள் |
- |
கோள |
- |
முன்னை மோனை |
|
|
பசுமை
|
- |
பாசி |
- |
பைமை |
- |
அள்ளை மோனை |
|
|
சிவன்
|
- |
செய்யான்
|
- |
சேயோன |
- |
பின்னை மோனை |
|
குளியம் = உருண்டை, குழியம் =
வளைதடி, கூளி = வளைந்ததாயுள்ள வாழை வகை, கொள் = வளைந்த காயுள்ள காணம், கொட்குதல் =
வளைதல், சுற்றுதல், சுழலுதல், கோள் = வட்டம், கதிரவனைச் சுற்றும் கிரகம், கோள், கோண்
= கோடு, குள் - கூள்.
|