முகு + உள் = முகுள் - முகிள் = அரும்பு
முகிள் + அம் = முகிளம் = அரும்பு
அரும்புதல் = தோன்றுதல்
முகுள் - (முகுர்) - முகுரம் = தளிர்
முகிள் - முகிழ் = அரும்பு. முகிளம் - முகிழம் = மலரும்
பருவத் தரும்பு
முகிழ்த்தல் = தோன்றுதல்
"மூவகை யுலகு முகிழ்த்தன முறையே" (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து).
முகு + ஐ = முகை = அரும்பு, முகைதல் = அரும்புதல்.
முகைத்தல் = அரும்புதல்
முகு- முக்கு - மொக்கு = அரும்பு.
மொக்கு - மொக்குள் = அரும்பு.
முகம் என்னும் சொல்லில் முகு என்னும் பகுதியும், முகு என்னும்
பகுதியில் மு என்னும் எழுத்தும், மு என்னும் உயிர்மெய்யில் உ என்னும் உயிரும், உயிர்நாடியான
உறுப்புகளாம்.
முன், முந்து முதலிய சொற்களில் முகரமும், ஊங்கு, உங்கு, உங்ஙன்,
உது, உவன் முதலிய சொற்களில் ஊகார உகரங்களும், அடிப்படையாயிருந்து முன்மைக் கருத்தை யுணர்த்துதல்
காண்க.
முகம் - முகர் - முகரை - மோரை.
முகர் - முகரி = முன்புறம்,
முகம் - முகன் - முகனை - மோனை.
முகு - முக - .
(2) வடமொழியிற் கூறும் மூலமும் பொருளும் ஒரு சிறிதும் பொருந்தாமை:
வடமொழியில் முகம் என்பது முக்ஹ (mukha) என்றே வழங்கினும்,
அதனை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, னகர (நகர) மெய்யை ஈற்றிற் சேர்த்து முக்ஹன் (mukhan)
என்னும் வடிவைப் படைத்து; அதில் ''மு'' என்னும் முதன்மையான பகுதியைப் பொருளற்ற முன்னொட்டாக
(Prefix)த் தள்ளி, எஞ்சிய க்ஹன் (khan) என்னும் கூற்றைத் தோண்டுதற் பொருள் தரும் வினைப்பகுதியாக்கி,
தோண்டுதல், தோண்டப் பட்ட கிடங்கு, கிடங்கு போன்ற வாய், வாயுள்ள இடம் (முகம்) என,
முறையே முகம் என்னும் சொற்குப் பொருளுரைப்பர் வடநூலார்.
இது பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாமையொடு,
|
ஊழிற்
பெருவலி யாவுள மற்றொன்று,
சூழினுந் தான்முந் துறும்
|
|
(குறள்.
380)
|
என்னும் தெய்வத் திருமறைக்கேற்ப, மீண்டும் முகம் என்பது தென் சொல்லேயென்பதை
வலியுறுத்தல் காண்க. முகம் - முகன் (கடைப்போலி).
இனி, கன் என்னும் சொல்லும் தென்சொல்லே.
|