கல் - கன். கல்லுதல் = தோண்டுதல். கன் - கன்னம் =
தோண்டுதல்,
சுவரைத் துளைத்துத் திருடுதல்.
லகரம் னகரமாகத் திரிதல் இயல்பு.
|
ஒ.நே
:
|
ஆல்
- ஆன் (3ஆம் வேற்றுமையுருபு).
|
|
|
மேல
- மேன.
|
(3) வடமொழியிலும் முக்ஹ என்பது முகம்
என்னும் பொருளில் வழங்கல்
எ-டு : முக்ஹ + கமல = முகத் தாமரை (தாமரை முகம்)
முக்ஹ என்னும் சொற்கு வடமொழியில் வாய் என்பதே முதன்மைப்
பொருளாகக் கொள்ளினும், முகம் என்னும் பொருட்கும் வட்டஞ்சுற்றி வழியே வருதல் காண்க.
(4) தொடர்புடைய தென் சொற்கள் :
தலையில் முகம் முன்புறமா யிருத்தல்போல் முகத்தில் மூக்கு
முன்னுறுப்பா யிருத்தலால், முன்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட முகம் என்னும் சொல் தமிழில்
மூக்கையும் உணர்த்தும்.
முகம் - முக, முகத்தல் = மூக்கால் மணம் நுகர்தல்.
முக - மோ - மோப்பு - மோப்பம்
முகம் - முகர், முகர்தல் = மோத்தல். முகர் - மோர்.
முகு - முக்கு - மூக்கு
மூக்கு = மூக்குப் போன்ற மூலை
முக்கு - முக்கை = ஆறு திரும்பும்
மூலை.
(5) எதுகை வடிவான இனப்பொருட் சொற்கள் :
முகு என்னும் அடிக்கு எதுகையான நுகு, புகு முதலிய அடிகளும், முன்மைக்
கருத்தின் வழிப்பட்ட தோன்றற் கருத்தை யுணர்த்துவனவாகும்.
நுகு - நுகும்பு = பனையின் இளமடல்
நுகு - நுங்கு = இளம் பனங்காய்ச்
சுளை அல்லது கொட்டை.
நுகு - (நகு) - நாகு = இளமை.
புகு - பூ, பூத்தல் = தோன்றுதல்.
"பூந்தலிற் பூவாமை நன்று"
பூ - போ - போத்து = இளங்கிளை.
போத்து - போந்து = பனங்குருத்து
போந்து - போந்தை = பனங்குருத்து.
புகு - (பொகு) - பொகில் = அரும்பு
பொகில் - போகில் = அரும்பு
ழகரம் சில சொற்களில் ககரமாகத்
திரியும்.
|