பக்கம் எண் :

யத
 

தமிழ் மொழி வரலாறு

109

வாக்கியத்தில் எழுவாயாக வருவது பெயராகும். அதனுடைய எல்லா வேற்றுமைத் திரிபுகளும் பெயர்ச் சொற்களாகும்.14 வினைமுற்று பயனிலையாக வருகிறது. ஆனால் அதே வடிவம் எழுவாயாகவும் வரலாம்; அதனோடு வேற்றுமை உருபுகள் சேர்க்கப்படலாம். “எழுந்தோனை”15 என்ற சொல்லைத் தொல்காப்பியரே அங்ஙனம் பயன்படுத்தியுள்ளார். முதலில் வினையாக இருந்த ‘எழுந்தோன்’ என்னும் இச்சொல்லே பெயராகப் பயன்படுத்தப்பட்டு, இரண்டாம் வேற்றுமை உருபு சேர்க்கப்பட்டு வந்துள்ளது. பெயர்ச் சொல் எவ்வித மாற்றமுமின்றிப் பயனிலைக்கு எழுவாயாக வரும். பயனிலையாக வருவது பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கும்:

1. பெயர்.

2. வினை; இதில் பின்வருவன அடங்கும்:

அ. ‘செயலை’ இறப்பு, எதிர்வு அல்லது நிகழ்காலத்தில் வெளியிடுவது.

ஆ. ‘உண்டு’ அல்லது ‘இல்லை’ என்பன போன்ற சொற்கள்.

இ. ‘யார்’ என்பது போன்ற வினாச்சொற்கள்.

ஈ. ‘வாழ்க’ என்பது போன்ற வியங்கோள் வினைகள்.

உ. ‘கரிது’ என்பது போலப் பண்பைக் குறிக்கும் வேர்களிலிருந்து ஆக்கப்பட்ட

சொற்கள்.16

சுருக்கமாகச் சொல்வதென்றால் பெயர்ச்சொல் என்பது எழுவாயாக வருவது; வேற்றுமை உருபுகளை ஏற்பது எனக் கூறலாம்.


14. தொல்காப்பியம், 549, 553

  “அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே”.
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப”.

15. தொல்காப்பியம், 1006.
16. தொல்காப்பியம், 550

  “பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்களாக வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே”.