|
3. 7 பிறமொழிக் கல்வெட்டுக்கள்
தமிழ்ச் சொற்களையும், தமிழர் பெயர்களையும், தமிழக இடப்பெயர்களையும் கொண்டுள்ள, இலங்கைச் சிங்களமொழிக் கல்வெட்டுக்களைப்
போன்ற பிற மொழிக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழி வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றுகளாகப்
பயன்படக் கூடியனவாகும்.
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்கள் சிலவற்றில் தென்மாவட்டங்களில் உள்ளது போன்ற
பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. பண்டைய நாணயங்களில் காணப்படும் எழுத்துக்களையும்
இவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம்.
3. 8 ஆவணங்களை ஆராயும்
முறை
இந்த ஆவணங்களை நமது ஆராய்ச்சி
நோக்கங்களுக்கு உரிய அடிப்படைச் சான்றுகளாகப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் பலசிக்கல்களை
இங்கு ஆராயவேண்டும்.14
உயர் தனிச் செம்மொழிகளையும், இதர பிற மொழிகளையும் பொறுத்தவரையில் அறிவியல் முறையிலான
‘பதிப்புமுறைத் திறனாய்வு’ (
textual criticism) மிகச் சிறந்து வளர்ந்துள்ளது. இதனைத் தமிழ்
இலக்கியங்களைப் பதிப்பிக்கும் ஆசிரியர்கள் பலர் இன்னும் அறியாதிருப்பதும் இடர்ப்பாடு
தருவதேயாகும்,
மேலும் தொல் எழுத்து ஆராய்ச்சியாளரும்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் வரிவடிவங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, இதுவரை அறியப்படாத பண்டைய
வரிவடிவங்கள் பலவற்றின் தன்மையைக் கண்டுபிடித்து உள்ளனர். இருப்பினும் சிந்து சமவெளி நாகரிகத்தின்
வரி வடிவம்பற்றிய உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இதுவரை வெற்றி பெறவில்லை.
ஓர் ஆவணம் முழுமையாக அல்லது பகுதியாக அல்லது சில தொடர்கள் மட்டுமாவது இருமொழிகளின் வரிவடிவங்களிலும்
எழுதப்பட்டிருக்குமாயின் அது ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியதாகும்.
மொழியியலாரும் ஒப்பிலக்கணத்தாரும்
ஓர் ஒலிவடித்திற்கு ஒரு வரிவடிவம் என்ற முறைமையும் மாறிப்போகத்தக்க அளவில்
|
14.
H. M. Hoenigswald :
Language Change and
Linguistic Reconstruction,
p p 5-12.
|
|