|
தமிழ் மொழி வரலாறு 12
வரிவடிவ அமைப்பினுள் ஓர் ஒழுங்கமைதி ஏற்படவேண்டும் என்ற கருத்தில் வரிவடிவ ஆக்கமுறைகளைச் சீர்திருத்தி வருகின்றனர்.
எடுத்துக் காட்டாக, உச்சரிப்பில் ககர மெய்யோடுகூடிய அகரம், வரிவடிவத்தில் உயிர் மெய்
எழுத்தான ககரக் குறியோடு குறிக்கப் படுவதே இயல்பு. ஆனால் சிற்சில இடங்களில் இதற்கு மாறாக
வரிவடிவில் ககர மெய்வடிவோடு மட்டுமே அமைந்து நிற்கக் காணுகிறோம். இம்முறைகளின் பயனாகத்
தமிழ் ஆவணங்களில் மெய்கள், சொல் முடிவுகள், வாக்கிய இடைவெளிகள் முதலியன குறிக்கப்படாத
பொழுதும் அவற்றைப் படித்து விடலாம். வரிவடிவமுறையின் பல்வேறு குறிப்புக்கள் மொழியின்
ஒலியன் அமைப்பை அறிய மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் நுனியண்ண
மூக்கொலியும், நுனிநா பல் மூக்கொலியும் ஒன்றான பின்னரும் வெவ்வேறானதாகவே எழுதப்படுகின்றன.
இது வரிவடிவ மரபைக் குறிப்பதற்கேயாம். மொழிக்கு முதலில் ஓர் எழுத்தும், ஏனைய இடங்களில்
மற்றோரெழுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மொழியின் வரி வடிவம் பிறிதொரு குடும்பத்து
மொழிக்குப் பயன்படுத்தப்படும் பொழுது, முரண்பாடுகள் தோன்றுகின்றன. திராவிட மொழியான
கோண்ட் மொழியை, தேவநாகரி வரிவடிவத்தில் எழுதும் பொழுது எகரம், ஒகரம் ஆகியவற்றைக்
குறிப்பதில் இடர் ஏற்படுகிறது. (தேவநாகரி வரிவடிவத்தில் எகரமும் ஒகரமும் இல்லை என்பதை
இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்.) உச்சரிப்பில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும், பழைய
முறையிலேயே எழுதும் ‘மரபின் நீட்சி’ இருப்பினும் அது அம்மொழியின் வரலாற்று வளர்ச்சியை
அறிய உதவும் குறிப்பைத் தருகிறது.15
மேலும் சிக்கலான
ஆவணங்களின் ஒலித்திறனாய்வு இப்போது எளிதாகி வருகிறது. இவற்றில் உள்ள பிழையான
எழுத்துக்கள், யாப்பியல், கலை மரபுகள் என்பன சரியான உச்சரிப்பைக் கண்டறிய உதவுகின்றன.
ஒரு மொழியின் வரிவடிவம் பிறிதொரு மொழியை எழுதப்பயன்படும்பொழுது, அம்மொழி ஒலிப்பு முறை
பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அது பெரிதும் உதவுகிறது. பெரும்பாலான இந்திய
வரிவடிவங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றே கூறலாம் ; குறிப்பிட்ட வட்டாரத்தில்
வழங்கும் உச்சரிப்பின் தனிப்பட்ட வளர்ச்சிகள்
|
Herbert Penzle :
The Evidence for Phonemic
Changes
Studies presented to Joshua
Whatmough, p 293.
|
|