|
என்ற வரையறைக்கு உட்பட்டு,
பல்வேறு மொழிகளிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்புத் தன்மையைத் தெளிவாக அறிந்து கொள்ள
இக்குடும்பப் பாங்கின் அமைப்பு உதவுகிறது. புதிய ஒலிகளின் உச்சரிப்பிற்காகப்
புகுத்தப்பட்ட ஒலிக் குறியீட்டுப் புள்ளிகளும் கோடுகளும்(
diacritical marks) பெறும் மதிப்பை அறியவும் இம்முறை உதவியுள்ளது. இந்த முறையில்தான் தமிழ்க்குகைக்
கல்வெட்டுக்களின் பிராமி எழுத்துக்கள் ஆராய்ந்து வாசிக்கப்பட்டன. சமஸ்கிருதத்திலிருந்து
இந்திய மொழிகள் கடன் பெற்ற உருபன்களின் ஒலிமதிப்பு தெரிந்திருப்பது, இத்தகைய ஒலி
ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியதாகும். ஒலியன்களைத் தரும் ஒப்பீட்டு முறையானது, மூல
ஒலிகளுக்கும் (
Original Sounds) பின்னர்
ஆக்கப்பட்ட ஒலிகளுக்கும் (
Derived Sounds) இடையே உள்ள பொதுமைப் பண்புகளை ஆராய இடந்தருகிறது.
3. 9 பிறமொழியாளர்கள்
குறிப்புரைகள்
தமிழ்ப் பெயர்களையும்
சொற்களையும் பற்றிப் பிற மொழிகளில் வழங்கும் குறிப்புக்கள், அடுத்துக் குறிப்பிடப்பட
வேண்டியதொரு மூல ஆதாரமாகும். கி. மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும்
( Vararuci)
கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதஞ்சலியும் ( Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம்,16
பிராகிருதம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமாரில பட்டரின்
( Kumarila
Bhatta) ‘தந்திர வார்த்திகா’ ( Tantra
Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் போன்ற திராவிடக் குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி. பி.
பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலா திலகம்’ (
Lila Tilakam)
என்னும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும்
உச்சரிப்புக்களையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராமசரிதம் போன்ற மலையாள நூல்கள்,
தமிழ் நூல்களே எனக் கூறப்படுவதுமுண்டு. மேலும் கல்வெட்டுக்களில் உள்ள
|
16. சமஸ்கிருதம், பாலி,
பிராகிருதம் முதலிய மொழிகளை ‘வட மொழி’ என்று
குறிப்பதால், Sanskrit என்பது ‘சமஸ்கிருதம்’ என்றே
இம்மொழி
பெயர்ப்பில் ஆளப்பட்டுள்ளது.
|
|