தமிழ் மொழி வரலாறு
116
|
1. வாழல்
ணு வாழ
2. வாழியர்
¥ வாழிய
¥ வாழி |
‘வாழல்’, ‘வாழ’ ஆகிய
இரண்டையும் மாற்று வடிவங்களாகக் கொள்ளலாம். ‘வாழ’ என்பதில் ‘வாழல்’ என்பதிலுள்ள லகர
மெய் இழக்கப்பட்டுள்ளது. ‘வாழல்’ என்பது இன்னும் பெயர்த்தன்மையதாக இருந்து வருகிறது.
அதாவது தொழிற்பெயராக வருகிறது. கால்டுவெல் ‘வாழ’ என்பதைச் ‘செய’ என்னும் வினையெச்சம்
என்கிறார்.24
‘வாழ வேண்டும்’ என்பது போன்ற தொடர்களில் ‘வாழ’ என்பது தொழிற் பெயராகவே இன்றும்
உள்ளது. இங்கு ‘வேண்டும்’ என்னும் வினையின் எழுவாயாக ‘வாழ’ என்பது வருகிறது.
பிற்காலத்தில் ‘செய்யும்’ எனும் வாய்பாட்டு வடிவம் தன்மைச் சொல்லுக்கேற்ற பயனிலையாக
வரமுடியாது. ‘நான் வாழ வேண்டும்’ என்பது போன்ற வாக்கியங்களில், ‘நான்’ என்பது
‘வேண்டும்’ என்பதன் எழுவாயாக இருக்க முடியாது; ஆனால் செய என்னும் வாய்பாட்டு
வினையெச்சமாகிய ‘வாழ’ என்பதே எழுவாயாக இருக்க முடியும். முன்னர் விளக்கப்பட்டது போலப்
பழைய பயனிலை வினையெச்சமாவதால் ‘வாழ’ என்பதும் வினையெச்சமாகிறது. பிற்காலத்தில்
இடச்சார்புக்கு ஏற்பச் ‘செய’ என்னும் வினையெச்சம் முக்காலங்களையும் உணர்த்திய
பொழுதிலும், பழங்காலத்தில் அது அவ்வாறு உணர்த்தவில்லை. பிற்கால வழக்காற்றுச் சான்றுகள்
வருமாறு:
|
“மழை பெய்ய நெல்
விளைந்தது” - இறந்தகாலம்
“நெல் விளைய மழை
பொழிந்தது” - எதிர்காலம்
“ கோழி கூவப் பொழுது
விடிந்தது” - நிகழ்காலம் |
நோக்கத்தைக் (purposive) குறிக்கும் எதிர்காலத்தை இவ்வடிவம், பழங்காலத்தில் காட்டவில்லை. ஏனெனில் அதற்குச்
‘செய்யிய’ போன்ற வேறு வாய்பாடுகள் இருந்தன.
வியங்கோள்
வினைக்குரிய பிற வடிவங்களாகப் பழங்காலத்தில் பொது வழக்காக இருந்த பயனிலைகளான “வாழி
ணு வாழிய
¥ வாழியர்” என்பன விளங்கின. இவை
மாற்று வடிவங்களாகும். ஒன்றில் ரகரமெய் கெட்டுள்ளது. பிறிதொன்றில் அத்துடன் யகரமும்
24.
R. Caldwell :
A Comparative Grammar of
the Dravidian Languages, p 535.
|
|