பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

117

மறைந்துள்ளது. ‘வாழிய’, ‘வாழியர்’ என்பன வினையெச்சங்களாக வருகின்றன. இகரம் பழைய சொல்லாக்க விகுதியாகலாம்.

சான்று :

‘சிறிய’ என்பதில் ‘சிறி < சிறு - இ''
        ‘பெரிய’ என்பதில் ‘பெரி < பெர் + இ’

‘வாழியர்’ என்பதில் உள்ள இசை நிறை எனக் கூறப்படும் ‘அர்’ விகுதி பழைய சொல்லாக்க விகுதியேயாகும்.

‘மயர

>

மய்

~

மஇ

+

அர்’

‘அயர

>

அய

~

அஇ

+

அர்’

முதலியவற்றை நோக்குக. இங்கு ‘அய்’ என்பது ‘அசை’ என்பதிலுள்ள ‘அச்’ என்பதனோடு உறழ்ந்து வருகிறது. ‘செய்யிய, செய்யியர்’ முதலிய வியங்கோள் வினைகள் நோக்கத்தைக் குறிக்கும் எதிர்கால வினையெச்சங்களாக வளர்ச்சியுற்றன. இவற்றுள் ‘செய்யிய’ என்னும் வாய்பாடே, பிற்காலத்தது என்ற முறையில் வழக்கு மிகுதியுடையதாகும்.

தொல்காப்பியர் தாமே மிகுதியாக ஆளும் இறந்தகால விகுதியான இகரத்தை இறந்தகால விகுதி எனக் கூறாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. சேனாவரையர் விளக்குவது போலத் தொல்காப்பியர் இறந்தகால உருபனுடன் அடக்கியிருக்கலாம்.25 சில பழைய வடிவங்கள் நீங்கலாக ஏனையவற்றில் இகர உயிருக்குப் பின்னரே இந்த இகர விகுதி வருகிறது; இங்ஙனம் இகர விகுதியின் வருகை முறை ஒலிச்சூழல்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ‘ற்’, ‘ட்’ ஆகிய இறந்தகால விகுதிகளைத் தொல்காப்பியர் குறிப்பிடாததற்கும் இவ்விளக்கத்தையே தரவேண்டும். இவை இரண்டும் உருபொலியன் விதிகளின்படி தகரமெய்யின் மாற்றொலிகளேயாகும்.

ல்

/

ன்

]

த்

>

ற்

ள்

/

ண்

]

த்

>

ட்

எல்லாச் சொற்களும் தொல்காப்பியர் காட்டும் இலக்கிய மொழி வழக்கில் இறந்தகால விகுதியான இகரத்தைப் பெறுகின்றன எனலாம்.

உறு

+

>

உறீஇ

(1025)

ஒரு

+

>

ஒரீஇ

(884)

புகு

+

>

புகீஇ

(1025)

கெழு

+

>

கெழீஇ

(1061)

 


25. தொல்காப்பியம், 713 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.