தமிழ் மொழி வரலாறு
118
இங்கெல்லாம் பின்வரும்
உருபொலியன் விதி பின்பற்றப்படுகிறது எனலாம்.
‘குற்றுயிர் /
நெட்டுயிர்1 + குற்றுயிர் / நெட்டுயிர்2 > நெட்டுயிர்2
குற்றுயிர்2’
மொழியின் இடையில்
இறந்தகால விகுதியான இகரம் ‘இன்’ எனவருகிறது. ஈற்றில் உள்ள னகரம் இழக்கப்படும் போக்கு
உள்ளது.
கொண்டா மொழியில்
(/
ijin/) எனவரும் ‘/இசின்’ (
icin)
இறந்தகால இடைநிலையாகவே ஒரே மாதிரி இங்குக் கருதப்படுகிறது. ஈருயிரிடைச் சகரமெய்
இழக்கப்படுமானால் ‘இஇன்’ என்பது எஞ்சுவதைக் காணலாம். அப்பொழுது, உயிரொலி
குறிலாகிறது. இதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தமிழில் காணப்படுவது
போன்ற ‘இன்’ என்னும் இறந்தகாலம் காட்டும் இடைநிலையை இது தரும். ‘இசின்’ என்பது
தொல்காப்பியத்திலும் வருகிறது. இகரமானது தனி விகுதியாகக் கொள்ளப்பட்டதால், ‘இசின்’
என்பதைத் தொல்காப்பியர் ‘சின்’ எனக்கொள்கிறார். ‘சின்’ என்பதை அவர் முன்னிலை
அசைநிலையாகக் கொள்கிறார். ‘இசின்’ என்பதிலுள்ள இகரத்தை முன்னிலை விகுதியாக அவர்
கொள்கிறார் எனலாம்.26
ஆனால் அவரே அதைத் தன்மைக்குப் பயன்படுத்துகிறார்.27ஆனால் ‘இசின்’ என்பதை ‘இ + சின்’ எனப் பிரிக்க முடியாது. இவ் அசை நிலைகளைப் பிற
இடங்களிலும் பயன்படுத்தலாம் எனத் தொல்காப்பியரே கூறுகிறார்.28
‘இசின்’ என்பதன் இலக்கண முக்கியத்துவம் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது என்பதை
அறுதியிட்டு உரைப்பது கடினமாக உள்ளது.
26.
தொல்காப்பியம், 759
|
“மியா இக மோ மதி
இகும் சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை
அசைச்சொல்”. |
27.
தொல்காப்பியர், 102
|
“. . .அஃதிவண் நுவலா
தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை
அளபுநுவன் றிசினே”. |
28.
தொல்காப்பியம், 760
|
“அவற்றுள்
இகுமும் சின்னும் ஏனை
இடத்தொடுந்
தகுநிலை யுடைய
என்மனார் புலவர்”. |
|
|