பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

120

இவ்வாறே பெயரெச்சவிகுதியான அகரமும் முன்னிலை விகுதியான ‘அய்’ என்பதும் சேர ‘ஆய் > ஓய்’ என்ற வடிவம் கிடைக்கிறது. இங்ஙனம் ‘அ + அர்’ (பலர்பால்விகுதி) ‘>ஆர்>ஓர்’ வருகிறது. இது பெயர்களுக்கும் வினைகளுக்கும் பொருந்தும். இது நிகழ்ந்த பிறகு ‘அன்’, ‘அள்’ முதலிய விகுதிகள் அவற்றுக்கு முன்னர் அகரம் வரவில்லையாயினும், ‘ஓன்’, ‘ஓள்’ ஒப்புமையாக்கத்தால் மாறுகின்றன. தொல்காப்பியரே ‘கிழவோன்’,35 ‘கிழவோள்’36 முதலிய வடிவங்களைப் பயன்படுத்துகிறார். பழைய விதியின்படி ‘கிழ + அன் > கிழா அன் ~ கிழவன் என ஆகும். ஆனால் கிழவோன் என்னும் வடிவம் வருவதில்லை.

வினையையும் பெயரையும் வேறுபடுத்திக் காண்பது கடினமானது. ஆனால் ஓகாரமான விகுதியுடன் வரும் வினைவடிவங்களை வினையாலணையும் பெயரெனக் கொள்ளலாம்.

பெயர்ப்பதிலி விகுதிகள் பின்வருமாறு :

  ஒருமை பன்மை
தன்மை37 கு ணு டு ணு து ~ று கும் ணு டும் ~ தும் ணு றும்
  அன் ணு ஆன் அம் ணு ஆம்
  என் ~ ஏன் எம் ணு ஏம்
  அல்  


35. தொல்காப்பியம், 1063.
36. தொல்காப்பியம், 1093.
37. தொல்காப்பியம், 687, 688.

 

“அவைதாம்,
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉங் கடதற என்னும்
அந்நஈற் கிளவியோடு ஆயென் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே”.
“கடதற என்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு
என்ஏன் அல்என வரூஉம் ஏழும்
தன்வினை யுரைக்கும் தன்மைச் சொல்லே”.