தமிழ் மொழி வரலாறு
122
உயர்திணை ஒருமை, பன்மை என இரு
பிரிவுகளை உடையது. ஒருமை என்பது ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ இருக்கலாம். ஆனால் உயர்திணைப்
பன்மையில் ஒரு பிரிவு மட்டுமே உண்டு. இங்கு ஆண்பால், பெண்பால் என்னும் பாகுபாடு இல்லை.
அஃறிணையில் ஒருமை, பன்மையென இரு பாகுபாடுகளே உள்ளன. இங்கு இவை இரண்டிலும் பால் பாகுபாடு இல்லை.
இப்பாகுபாடுகள் விகுதிகளால் குறிக்கப்படுகின்றன. அவை வினையில்தான் வெளிப்படையாக
இருக்கும். இவ்வேறுபாடுகளைக் காட்டாத பழைய தனி நிலைப் பெயர்கள் உள்ளன. சான்று: நீர்,
வில்.

இருவகையான வடிவங்களை உடைய விகுதிகள் உள்ளன. 1. நெடிலுயிரை முதலாக உடையன. 2. குறிலுயிரை முதலாக
உடையன. குறிலுயிரே தொடக்கத்திலிருந்தது என்றும் நெடிலுயிர் சந்தியின் விளைவென்றும் இங்குக்
கொள்கிறோம். எதிர்மறை வினை விகுதிகளின் உயிர், அவற்றுக்கு முன் வரும் எதிர்மறை விகுதிகளால்
நெடிலாக்கப்படுவதால், நெடிலாக விளங்குகிறது என்னும் கால்டுவெல்லின் விளக்கத்தை அடிப்படையாகக்
கொண்டு நாம் இவ்வாறு கொள்கிறோம்.
சான்று :
|
செய் + அ + அன் > செய்யான்
செய் + அ + என்
> செய்யேன் (தன்மை)
செய் + அ + அய்
> செய்யாய் (முன்னிலை)
செய்த + அன் /
அள் / அர் > செய்தான்; செய்தாள்.
(பெயரெச்சம்)
செய்தார்.
|
|