தமிழ் மொழி வரலாறு
123
தொல்காப்பியர் காலத்திலிருந்து இலக்கண ஆசிரியர்கள்
நெடிலோடு கூடிய விகுதிகளையும் குற்றுயிருடைய விகுதிகளையும் மாற்றுருபுகளாகக் கருதி வந்துள்ளனர்.
இவை உம்மைப் பொருள் கொண்ட எச்சத்தின் (Stem)
அடியுடன் சேர்க்கப்படுகின்றன. குற்றுயிர் விகுதிகள் வருமிடங்களை வரையறுக்க முயலும்
சேனாவரையர், ‘அன்’ விகுதிக்குப் பின்னர் அவை வரும் என்கிறார்.40
அவர் அதைக் ‘காலவெழுத்து’ என்றழைக்கிறார். அவருடைய கருத்து ‘நல்லள்’ என்பது போன்ற
வடிவங்களுக்கு ஏற்புடைத்தன்று. ஏனெனில் இங்கு அன் விகுதி, மேலே கூறியவாறு இடம் பெறவில்லை.
குற்றுயிர் உள்ள விகுதியையே பழைய வடிவம் என நாம் விளக்குகிறோம். குற்றுயிருக்கு முன்னர்
அகர உருபு வருவதால், குற்றுயிர் நெட்டுயிராகிறது. சான்று: ‘செய்தான்’ (இங்கு அகர உருபு
பெயரெச்ச விகுதியாகும்). இவ்வாறாகக் குற்றுயிருடன் வரும் விகுதிகளும் நெட்டுயிருடன் வரும்
விகுதிகளும் வேறுபடுத்தப்படுகின்றன. பெயர்ச்சொல்லும் வினையாலணையும் பெயரும் கூட இவ்வாறே
வேறுபடுத்தப்படுகின்றன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
எதிர்கால
வினைமுற்று வடிவங்களைப் பொறுத்த வரையில் ஒரு சிக்கல் உள்ளது. ஏனெனில் தமிழில் திணை,
பால், எண், இடம் காட்டும் விகுதிகளைச் சேர்த்து நீண்ட சொல் வடிவங்களைத் தரத்தக்க
எதிர்காலத்திற்கேயுரிய பெயரெச்ச வடிவங்கள் இல்லை. தமிழில் உள்ள ‘செய்வ’ அல்லது
‘செய்ப’ என்பதற்கு இணையான கெய்வ41எனும் வாய்பாட்டு எதிர்காலப் பெயரெச்சம் கன்னடத்தில் காணப்படுகிறது. ஆன், ஆள், ஆர்
ஆகிய ஈற்றுருபுகளைப் பெற்றுள்ள எதிர்கால வினைமுற்றுக்களில் பாதுகாக்கப் பெற்றிருந்தாலும்
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இது தனித்து வழங்கும் வடிவமாக இல்லாது போயிருக்க
வேண்டும். சான்று : செய்வ + அன் > செய்வான். இம்முடிவைச் சரிபார்க்க வேறொரு வழியும்
உண்டு; பெயரெச்சம் என்பது வினையெச்சத்துடன் அகர விகுதி சேர்க்கப்பட்டு அமைந்ததேயாகும்
எனக் கொண்டோம். ‘செய்ப
ணு
செய்வ’ என்பதைப் பழைய பெயரெச்ச வடிவம் எனக் கொண்டால் இவ்வடிவங்களில் ஈற்று
அகரத்தை நீக்கிய நிலையில் வினையெச்சம் வரப்பெறுதல் வேண்டும். நாம் முன்னரே
விளக்கியபடியும்
40.
தொல்காப்பியம், 687 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.
41.
R.
Caldwell :
A Comparative Grammar of the Dravidian Languages, p
522.
|
|