பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

124

தொல்காப்பியர் கருத்துப்படியும் இம்முறையில் ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை நாம் பெறுகிறோம்.

அ. பெயர்ப்பதிலி விகுதிகள் பெறாத வடிவங்கள்

பழைய வடிவங்கள் சில தொல்காப்பியர் காலத்தில் தொடர்ந்து வழக்கிலிருந்தன.

தன்மை

  ஒருமை  

 

பன்மை  
விகுதி   வடிவம் விகுதி   வடிவம்
கு  

செய்கு் 

 கும்   செய்கும்
து   செய்து தும்   செய்தும
டு   உண்டு டும்   உண்டும்
று   சேறு றும்   சேறும்
இசின்   நுவன்றிசின்      

சேனாவரையத்தின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன.42

நன்னூலில் ‘உண்டு, உண்டும், வந்து, வந்தும், சென்று, சென்றும்’ ஆகியன இறந்தகாலத்தனவாகக் குறிக்கப்படுகின்றன. ‘சேறு, சேறும், வருது, வருதும்’ ஆகியன எதிர்காலத்தனவாகக் குறிக்கப்படுகின்றன.43 சேனாவரையருக்கும் நன்னூலாருக்கும் இடையே உள்ள இக்கருத்து வேறுபாடானது முதலில் இவை காலம் காட்டாதவைகளாக இருந்து பின்னர்க் காலங்காட்டும் இயல்பினைப் பெறலாயின என்ற கொள்கைக்கே ஆக்கந்தருகிறது.

முன்னிலை

தமிழில் வேர்ச்சொற்களே ஏவல் வினைகளாக விளங்குகின்றன. தொல்காப்பியரால் வெளிப்படையாகக் கூறப்படவில்லையாயினும் பழைய பயனிலை வடிவங்கள் ஏவல் வினையாகவும் வழங்கியிருக்க


42. தொல்காப்பியம், 688ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.

43. நன்னூல், 145

 

“றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
கழிவுங் கவ்வோ டெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே”.