தமிழ் மொழி வரலாறு
125
வேண்டும் என முடிவு
கட்டலாம். முன்னிலை அசைநிலையான ‘இக’ என்பது இன்றும் இலங்கைத் தமிழில் வழங்கும்
‘சொல்லிக’ என்ற சொல்லில் காணப்படுகிறது. முன்னிலை அசை நிலையான ‘மியா, மோ’
என்பவற்றில் உள்ள மகர மெய் பன்மை காட்டும் பழைய உருபாகலாம். ‘மியா’ என்பதிலுள்ள
மகரத்தை நீக்கினால் எஞ்சியுள்ள ‘இயா’ என்பது, ‘இக’ என்பதன் மாற்று வடிவமாக இருக்கலாம்.
‘இக்’ என்பதிலுள்ள உயிரிடை மெய்யான ‘க்’ இழக்கப்பட்டு ‘இயா’ வந்திருக்கலாம். மேலும்
மகர மெய்யுடன் முடியும் ‘இகும்’ என்னும் அசைநிலையும் உண்டு. ‘இகும்’ என்பதை ‘இசின்’
என்பதோடு இணைத்துப் பார்க்கலாமெனத் தோன்றுகிறது. கடையண்ணக் ககர மெய்யை அடுத்து இகரம்
வராத நிலையில், அது இடையண்ண ஒலியாதல் இல்லை; ஆதலால் இரண்டையும் இணைத்துக் காண்பதில்
இடையூறு ஏற்படுகிறது. இதே இடையூறு வேறு பல வடிவங்களை இணைத்துக் கூறுவதிலும் உள்ளது. சான்றாகக்
‘குருள்’, ‘சுருள்’ என்னும் வடிவங்களைக் காட்டலாம். மதி என்னும் அசைநிலையில் ஒன்றுக்கு
மேற்பட்ட விகுதிகள் உள்ளன. மதி -> ம் (பன்மை விகுதி) + அ (சொல்லாக்க விகுதி) +
து(சொல்லாக்க விகுதி) + இ (முன்னிலை விகுதி) வியங்கோள் வினையின் அசைநிலை ‘மோ’ (ம்
+ ஓ) என்பதாகும். இவற்றிலெல்லாம் உள்ள மகர மெய் பிறழ்பிரிப்பின் விளைவேயாகும்.
சான்று : காண் + ம் + ஓ > காண்ம் + ஓ > காண் + மோ
படர்க்கை
தொல்காப்பியத்தில் பேணப்பட்டுள்ள பழைய வடிவங்கள் பின்வரும் நிலையையே
புலப்படுத்துகின்றன. தொடக்கத்தில் ஒருமை னகரத்துக்கும் பன்மை மகரத்துக்கும்இடையில்
மட்டுமே வேறுபாடு இருந்திருக்க வேண்டும். ம்/ன் என்ற வேற்றுநிலைவழக்கு மறைவினால்
கிடைக்கும் வடிவம் - ம். ‘செய்ப’ என்பது ‘வாழ்க’ என்பதைப் போல எல்லா இடங்களுக்கும்
எண்களுக்கும் பொதுவானதாகக் குகரச்சொல்லாக்க விகுதிக்குப் பதிலாகப் புகரச் சொல்லாக்க
விகுதி பெற்று வழங்கி இருக்க வேண்டும்.
|